பக்கம் : 736
 
 
1161. ஏவது செய்து வாழும் யாமுள 1மாக வெங்கோ
நோவது 2செய்த வேந்தர் நுனித்துயிர் வாழ்ப வாயிற்
சாவது போக வாழ்க்கை தவந்தலை நிற்ற லொன்றோ
வீவது செய்த லொன்றோ நமக்கினி விளைவ தென்பார்.
 

     (இ - ள்.) ஏவது செய்து வாழும் யாம் உளராக - ஏவிய செயலை இனிது செய்து
வாழ்வேமாகிய யாம் உயிருடன் இருப்பேமாகவும், எங்கோ - எம்முடைய தலைவன்,
நோவது செய்த வேந்தர் - இன்னல் உறத்தக்க செயலை அஞ்சாது இயற்றிய பகை
வேந்தர்கள், நுனித்து உயிர் வாழ்ப ஆயில் - வாழும் நெறிகளை ஆராய்ந்து இனிதின்
உயிர் வாழ்தலையுடையர் ஆன பொழுது, அது சாவு - அவர் வாழும் அது நமக்குற்ற
சாவே பிறிதில்லை, வாழ்க்கை போக - இத்தகைய இளிவரவுடைய நம் வாழ்க்கை இனி
ஒழிக, நமக்கு இனி விளைவது - நமக்கு இனி உண்டாகற்பாலது, ஒன்று தவந்தலை நிற்றல்
- ஒன்றில் வைத்து இவ்விழி பிறப்பறுமாறு தவநெறியினிற்றல், இன்றேல், ஒன்று வீவது
செய்தல் - ஒருகூற்றில் வைத்து, இறத்தல், என்பார் - என்று தம்மைத்தாமே இகழ்வார்கள்,
(எ - று.)

ஏவது: விகாரம்; ஏவுவது என்றவாறு.
ஏவியவற்றைச் செய்து உயிர் வாழும் இயல்புடைய யாம் இருக்கும் போதே, எம் தலைவன்
நோவது செய்தார் வாழ்தல், நமக்குற்ற சாவாம்; இவ் வாழ்க்கை வேண்டா! இனி நமக்கு
ஒன்று சாதல் அன்றேல் தவம் புகல் இரண்டின் ஒன்று அமைவதாக என்றார் என்க.
 

( 31 )

 

1162. நாண்டொழின் மகளிர் முன்னு நகைக்கிளை யாயத் துள்ளும்
வீண்டொழில் விளம்பி யென்னை வீரங்கள் வெறிய வாக
ஆண்டொழில் புகுந்த தம்மா வதோவினி தாயிற் றென்று
3தூண்டொழ வளர்த்த தத்தந் தோள்களை நோக்கு கிற்பார்.
 
     (இ - ள்.) நாண் தொழில் மகளிர் முன்னும் - நாணுகின்ற தொழிலையுடைய பெண்டிர்
முன்னிலையினும், நகை்கிளை ஆயத்துள்ளும் - நகை வகையராகிய நம் கேளிர்
கூட்டத்தினும் வீரங்கள் வெறியபோக - நம் மறத்தன்மை வெறுவிதாய் ஒழியுமாறு,
வீண்தொழில் விளம்பி என்னை - வீணாக நம் மறத்தொழிற் பெருமையைச்
சொன்மாத்திரையானே பாரித்துரைத்தலிற் பயன் என்னாம், ஆண்டடொழில் புகுந்தது
அம்மா - ஆண்மைக்குரிய போர்த்தொழில் இப்போது நம்பால் எய்திற்று!, அம்மவோ
 

 


     (பாடம்) 1வாக. 2செய்து. 3தூண்டொழில் வளரத் தத்தம் தோள்களை நோக்குவாரும்