பக்கம் : 737 | | அதுஓ இனிதாயிற்று - ஆவா அப்போர்புக்கது என்னும் மாற்றமே எமக்கு ஆற்றவும் இனிமை பயப்பதொன்றாயிருந்தது, என்று - என்று உவந்து கூறி, தூண்தொழ - தூண் அஞ்சி வணங்கும்படி, வளர்த்த - திண்ணியவாக வளர்க்கப்பட்ட, தத்தம் தோள்களை நோக்குகிற்பார் - தத்தம் தோள்களைக் கடைக்கண்ணால் நோக்கா நிற்பர், (எ - று.) மகளிர் முன்னும், ஆயத்துள்ளும், வீரம் வெறிதாக வீண்மொழி விளம்பி என்னாம்? ஆண்மைக்குரிய போர்த் தொழில் நமக்குக் கிட்டிற்று; அஃதே அமையும் என்று மகிழ்ந்து தம் தோளை நோக்குவார், என்க. | ( 32 ) | | 1163. | நாள்வடுப் படாமை நம்மைப் புறந்தந்தாற் குதவி 1நங்கள் தோள்வடுப் 2படாது 3தோன்றல் புகழ்வடுப் படுத லுண்டே வாள்வடுப் பிளவு போலுங் 4கண்ணியை மகிழ்ந்த காளை 5கேள்வடு்ப் படரும் பூசல் கேட்டிரா னாளை யென்பார். | (இ - ள்.) நாள் வடுப்படாமை - வீழ்நாள்படாமல், நம்மைப் புறந்தந்தாற்கு உதவி - நம்மைக் காப்பாற்றியருளிய நம் தலைவனுக்கு உற்றுழி உதவி செய்து, நங்கள் தோள்வடுப்படாது தோன்றல் - நம்முடைய தோள்களிலே தழும்பு உண்டாகாதவாறு யாம் அவைகளிலே வந்து தோன்றுதல், புகழ்வடுப்படுதல் உண்டே - நம்முடைய புகழை அழிப்பதொன்றாயிருந்தது, வாள் வடுப்பிளவு போலும் கண்ணியை - வாளைப்போன்றும் மாவடுவின் பிளவைப் போன்றும் அழகிய கண்ணையுடைய சுயம்பிரபையை, மகிழ்ந்த காளை - புணர்ந்து மகிழ்ந்த திவிட்டனுடைய, கேள் - உறவினர்க்கு, வடுப்படரும் பூசல் - பழிவிரிதற்குக் காரணமான போர் ஆரவாரத்தை, நாளை கேட்டிர் - நாளையே கேட்கக்கடவீர், என்பார் - என்று கூறுவர், (எ - று.) கேள்வடுப்படரும் பூசல் கேளிர்களின் உடல் வடுவுண்டாவதற்குக் காரணமான பூசல் எனினும் ஆம், நாள் வடுப்படுதல் - நாள் வீணாளாகக் கழிதலாகிய மாசுபடுதல். “புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா டிரைந்துகோட் டக்க துடைத்துÓ (திருக்.780) என்பவாகலின், “புறந்தார்க்கு உதவித் தோள் வடுப்படாமை, புகழ் வடுப்படுதலாம்Ó என்றார், என்க. | ( 33 ) |
| (பாடம்) 1தங்கள். 2படாமை. 3மன்னன். 4கண்ணிமை. 5கோள். | | |
|
|