பக்கம் : 743 | | கனகசித்திரன் கூறிய பின்னர், அச்சுவகண்டன் தம்பியாகிய, வச்சிரகண்டன் என்பான், யாங்கள் உயிருடன் இருக்கும் போழ்தே நமக்கொரு பகையுண்டாயிற்றென்றல் நாணுத்தகவுடைத்து; நம் மறம் போயிற்றுப் போலும் என்று கண் சிவந்தான், என்க. | ( 41 ) | | 1172. | மகரமால் கடலை யல்லாற் சிறுகய மதலை சேரா சிகரமால் யானை வேந்தே தானவர் செருவன் றாயி 1னிகரலா நீசர் தம்மேல் நீலெசற் 2பாற்றன் றென்று புகரெரி யவிக்க லுற்றான் பொழிமழை பொழிவ தொத்தான். | (இ - ள்.) மகரமால் கடலை யல்லால் - மகர மீன்கள் வாழும் பெரிய கடலின்கட் சேர்வதல்லது, மதலை-மரக்கலங்கள், சிறு கயம் சேரா - சிறிய குளத்தைச் சேரமாட்டா, சிகரமால் யானை வேந்தே - மத்தமுடி அணிந்த அரசுவாக்களையுடைய மன்னனே, தானவர் செரு அன்றாயின் - அசுரர்கள்பால் போர் செய்வதாயின் செல்வதல்லது, நிகரிலா நீசர் தம்மேல் - நினக்கு ஒரு சிறிதும் ஒப்பற்ற கீழோராகிய மனிதரிடத்தே, நீ செலற்பாற்று அன்று - நீ போர் செய்யச் செல்லும் பான்மையை அல்லை, என்று புகர் எரி அவிக்கலுற்றான் - என்று கூறிப் பெரிய சினநெருப்பை அவிக்கின்றவனாகிய வச்சிர கண்டன், பொழிமழை பொழிவதொத்தான் - மிக்குப் பொழிகின்ற மழையை ஒத்தவனானான், (எ - று.) கடலிடத்தே செல்வதல்லது மரகலம், சிறிய குளத்திலே சேருமோ, வேந்தே நினக்குச் சிறிதும் நிகரிலாப் பொள்ளல் யாக்கை மானுடரைப் பொருதற்கு, நீ போதல் தகுதியன்று, என்று அச்சுவ கண்டனுடைய உள்ளம் குளிர உரைத்தான், என்க. | ( 42 ) | அச்சுவகண்டன் சினந் தணிதல் | 1173. | வேறுவே றாகி நின்று வெஞ்சினஞ் செருக்கி விஞ்சைக் கேறனான் றம்பி மாரு மக்களு மின்ன போல்வ கூறினார் கூற லோடுங் குரையழ லவிவ தேபோல் ஆறினா னென்னை செய்யு 3மாயபண் பதுவ தானால். | (இ - ள்.) விஞ்சைக்கு ஏறு அனான் - வித்தியாதரருலகிற்குச் சிங்கத்தை ஒத்த அச்சுவகண்டன், தம்பிமாரும் மக்களும் - தன் தம்பியரும் மக்களுமாவார், வேறு வேறாகி நின்று - வெவ்வேறாய்த் தனித்து நின்று, | |
| (பாடம்) 1நிகரிலா. 2பாலதன்று. 3மாகு பண் | | |
|
|