பக்கம் : 748
 

     வெல்லற்கு அமைவதாம், என்று - என்றிவ்வாறு, அங்கு ஒருவன் ஓவுதலின்றி
ஓதிவைத்தது - அவ்விடத்தே ஒரு சாத்தன் ஒழிவில்லாதே ஓதிநூலின்கண்ணே வைத்தது
யார்க்கோ எனில்?, பூவினும் - நில்லாமையே இயல்பாகவுடைய இவ்வுலகத்தே, சாவதை
அஞ்சுவார்க்கும் - இறத்தலை அஞ்சும் மடவோர்க்கும், தகைமையில்லவர்க்கும் -
மறத்தகுதியில்லாத எளியோர்க்குமே யாம், என்றான் - என்று கூறினான், (எ - று.)

போர் வெல்லலுறும் அரசர், எண்ணித் துணிதல் வேண்டும் என்று அரசியல் நூலிற
கூறியது, இறத்தலை அஞ்சுவோர்க்கும், மறத்தன்மையில்லோர்க்குமே யல்லால்,
எம்மனோர்க்கன்று. என்றான் என்க. எனவே, இனி ஏதும் எண்ணற்க; போர்க்குப் புறப்படுக,
என்றபடியாம்.

(49)

 

அச்சுவகண்டன் அரிசேனனைப் பாராட்டல்

1180. அழலவி ரலங்கல் வேலோ னவ்வேரி சேன னென்பான்
கழலவன் காதற் றோழன் 1கனன்றவன் கருதிச் சொன்ன
மொழியெதி ருலக மாள்வா னுவந்தவன் 2முகத்தை நோக்கிப்
பழிபெரி தொழியச் சொன்னான் படைத்திற லாள னென்றான்.
 
     (இ - ள்.) அழல்அவிர் அலங்கல் வேலோன் - தீயைக்காலும் வெற்றிமாலை
சூட்டப்பட்ட வேற்படையையுடைய, அ அரிசேனன் என்பான்- அந்த அரிசேனன் ஆகிய,
கழலவன் காதல் தோழன் - வீரக்கழலையணிந்த அச்சுவகண்டனுடைய அன்பிற்குரிய
நண்பன், கருதிச் சொன்ன - ஆராய்ந்து கூறிய மொழிஎதிர் - மொழிகளுக்கு மறுமாற்றமாக,
உலகம் ஆள்வான் - அச்சுவகண்டன், உவந்து - மனம் மகிழ்ந்து, அவன் முகத்தை
நோக்கி - அவனுடைய முகத்தை விரும்பிப் பார்த்து, படைத்திறலாளன் -
போர்ப்படையின்கண் ஆற்றல்மிக்கவனாகிய அரிசேனன், பழிபெரிது ஒழியச் சொன்னான் -
பெரிதும் நம்பழி ஒழிந்துபோமாறு நன்கு கூறினான், என்றான் - என்று முகமன்
மொழிந்தான்.

இது முன்னிலைப் புறமொழி. தன் தோழனாகிய அரிசேனன், நன்கு பழியொழியக்
கூறினான்; அவன் படைத்திறலாளன் ஆதலின், என்று அச்சுவகண்டன் அரிசேனனைப்
பாராட்டினன் என்க. பழியாவது, தன் அனைய திறல் மறவர் மந்திரசாலையிலிருந்து
ஆராய்தல், என்பது அச்சுவகண்டன் கருத்துமாம் என்க.
 

(50)

கருடக் கொடியோன் போர்த்திறம் வினாதல்

1181. பொருவதோ வெளிதி யாங்கள் பொருந்திற முரைமி னென்னை
மருவிய 3மனிதப் போரோ வான்கெழு தெய்வப் போரோ
 

     (பாடம்)1 கனன்றவன். 2 முகத்து. 3 மனிசர்.