பக்கம் : 752
 

படைக்கல விகற்பகங்களையும், போர் விகற்பங்களையும், கூறப்புகின் விரியுமாதலால், அது
நிற்க; யாம் மனிதரோடே போராற்றலாலே மனிதப் போரே ஆற்றற்பாலது; அதன்கண்
வேறு போர் கலப்புறின், அது நமக்குப் பழியாம் என்றான், என்க.
 

( 55 )

 
1186. விஞ்சையர் பொருவ ராயில் விஞ்சையிற் பொருது மன்றி
வஞ்சனை யின்றி மக்கள் பொருபவேன் மக்கட் போரே
எஞ்சுத லின்றி யேற்ற பொருதுமென் றின்ன சூழ்ந்து
நஞ்சனாற் குரைப்பக் கேட்டு நன்றது துணிமி னென்றான்.
 

     (இ - ள்.) விஞ்சையர் பொருவராயில் விஞ்சையிற் பொருதும் - விச்சாதரர் நம்மொடு
போர் செய்வாருளரெனில் யாமும் அவரொடு செய்யற் பாலதாகிய தெய்வப் போரே
ஆற்றுவோம், அன்றி - அவ்வாறன்றி, வஞ்சனையின்றி - வஞ்சகம் கலவாமல், மக்கள்
பொருபவேல் - மனிதரே நம்மொடு போர் செய்வாரெனில், மக்கட்போரே - யாமும்
மனிதப் போரினையே, எஞ்சுதல் இன்றி ஏற்ற பொருதும் - குறைநேராமல் அவ்வவர்க்குப்
பொருந்துமாற்றால் ஆற்றுதும், என்று இன்ன சூழ்ந்து - என்று இன்னோரன்னவற்றை
ஆராய்ந்து, நஞ்சனாற்கு - நஞ்சை ஒத்த அச்சுவகண்டனுக்கு, உரைப்ப - சிறீசேனன்
இயம்ப, கேட்டு நன்று அது துணிமின் என்றான் - அவற்றை நன்கு கேட்டு, நன்றுநன்று,
அவ்வாறே செய்யுங்கோள் என்று கூறினான், (எ - று.)

மானிடர்க்குத் துணைப்படையாகி விச்சாதரர் வருவாரெனில், அவரோடு தெய்வப் போர்
ஆற்றுதும்; வஞ்சகமில்லா மக்கட்போரினை மக்களோடே ஆற்றுதும்; அவ்வவ்வமயத்திற்
கேற்றவாறே ஆற்றுதும்; என்று சிறீசேனன் நஞ்சனாற்குரைப்ப, அவனும் நன்று, அவ்வாறே
துணிமின், என்றான் என்க.
 

( 56 )

 
1187. ஆய்ந்தவ ரோடு போதந் தாழியா னருவிக் குன்றிற்
காய்ந்துவந் திறுத்த பின்றைக் கடிநகர் நமது தன்மேற்