பக்கம் : 753
 

 

  சேந்தெரித் திடுது மென்று தென்மலை யரசர் சென்றார்
வாய்ந்துமற் 1றொழிந்த மன்னர் 2வரவலித் திருந்தா ரென்றான்.
 

     (இ - ள்.) ஆய்ந்தவரோடு - இவ்வாறு ஆராய்ச்சி செய்த அமைச்சரோடே, போதந்து
- போய், ஆழியான் - அச்சுவகண்டன், அருவிக்குன்றில் - தனது அருவிபாயும் உத்தரசேடி
என்னும் மலையிடத்தே, காய்ந்து வந்து இறுத்தபின்னை - சினந்து மீண்டு வந்து தங்கிய
பின்னர், தென்மலையரசர் - தென்பால் உள்ள மலைகட்கு அரசராவோர், நமது கடிநகர்
தன்மேல் - நம்முடைய காவல் மிக்க நகரத்தின்மேல், சேந்து எரித்திடுதும் என்று - சினந்து
வந்து அதனைச் சுட்டெரிப்போம் என்று கூறி, சென்றார் - போயினார், மற்றொழிந்த
மன்னர் - அவரை ஒழிந்த ஏனைய அரசர்கள், ஆய்ந்து - தம்முள் ஆராய்ந்து,
வரவலித்திருந்தார் - நம்மேல் போர்க்கு வருதற்குத் துணிந்துள்ளார், என்றான் - என்று
ஒற்றன் உரைத்தான், (எ - று.)

இங்ஙனம், ஆராய்ச்சி செய்த பின்னர், நமது இரதநூபுரச் சக்கிரவாளத்தின்மேல் வந்து,
அதனை எரித்திடுதும் என்று தென்மலை மன்னர் சென்றனர், ஏனையோர், போதனத்திற்கு
வர எண்ணி யிருந்துளார், என்று ஒற்றன் உரைத்தான், என்க.
 

( 57 )

சடி தன் சுற்றத்தாருடன் ஆராய்தல்

1188. ஒற்றனாங் குரைப்பக் கேட்டே யொளியவன் பெயர னோடுஞ்
சுற்றமா யவருஞ் சூழ்நீர்ச் சுரமைநா டுடைய கோவு
மற்றவன் புதல்வர் தாமும் வருகென 3வந்தார் மாற்ற
முற்றவா றறியச் சொன்னா னொளிவரை யரசர் கோவே.
 
     (இ - ள்.) ஒற்றன் ஆங்கு உரைப்பக் கேட்டே - ஒற்றன் அவ்வாறு கூறக்கேட்டு,
ஒளிவரை அரசர்கோ - புகழ்மிக்க இமயமலையை ஆளும் மன்னர் மன்னனாகிய
சடிவேந்தன், ஒளியவன் பெயரனோடும் - கதிரவன் பெயரைத் தன் பெயராகவுடைய
அருக்ககீர்த்தி என்பானுடன், சுற்றம் ஆயவரும் - தம் கேளிர்களும், நீர்சூழ் சுரமைநாடு
உடையகோவும் - நீராற் சூழப்பட்ட சுரமை நாட்டையுடைய பயாபதிவேந்தனும், மற்றவன்
புதல்வர்தாமும் - அவன் மக்களாகிய விசயதிவிட்டர்களும், வருகென - எம்பால்
வருவாராக என்று அழைப்ப, வந்தார் - அனைவரும் சடியரசன்பால் வந்துற்றனராக,
மாற்றம் உற்றவாறு - ஒற்றனால் தான் அறிந்த செய்தியை அறிந்தவாறே, அறியச்
சொன்னான் - அவர்கள் அறியும்படி கூறினான்,
 

( 58 )


     (பாடம்) 1றொழிந்து. 2மேல் வர வலிந்து நின்றார். 3வந்த.