பக்கம் : 756 | | | 1192. | இமையவ ரரசன் றானு மிகல்செயக் கருதி வந்தா லமையுமஃ தஞ்ச 1லாமே யாண்கட னதுவ தானா னவையின ருளரென் றஞ்சி நடுங்கினர் தமக்கு நாளுஞ் 2சுவைபெறு தோளும் வாளுஞ் சொல்லுமின் சுருங்க வென்பார். | (இ - ள) இமையவர் அரசன்றானும் - இவ்வச்சுவகண்டன் கிடக்க, அமரர்கள் வேந்தனாகிய இந்திரனே ஆயினும், இகல்செயக் கருதி வந்தால் - நம்பால் போராற்றுதலை எண்ணி வருவானாயின், அமையும் - நமக்குப் பொருந்துவதேயாம், அஃதஞ்சலாமே - அதற்கு யாம் அஞ்சுதல்தகுமோ, ஆண்கடன் அதுவது ஆனால் - ஆண்மையுடையோர் கடமை அவ் வஞ்சாமையே ஆயின், நவையினர் உளர் என்று அஞ்சி - தீமை செய்யும் பகைவர் உளரே என்று நினைக்கும்போதே அச்சமடைந்து, நடுங்கினர் தமக்கு - நடுங்கும் இயல்புடையோர்க்கு, தோளும் வாளும் சுமைபெறும் - அவருடைய தோளும் அவர் ஏந்திய வாளும் அவர் வருந்துதற்குக் காரணமான சுமையே ஆகப் பெறும், சொல்லுமின் சுருங்க என்பார் - நும்முடைய எண்ணங்களையும் எமக்குச் சுருக்கமாகக் கூறுங்கள் என்பார், (எ - று.) ஆண் கடன் அது - அதுவது என்புழி, அது, பகுதிப் பொருளது. அதுவானால் - அவ் வஞ்சாமையே ஆயின். இந்திரனே நம்மை எதிர்ப் பினும் வீரவாழ்க்கை மேற்கொண்ட யாம் அஞ்சுவதும் உண்டோ, அத்தகைய வீரமற்றோர் கொண்ட வில்லும் வாளும் தோளும் அவர்க்குச் சுமையேயாம் நுங்கருத்தையும் கூறுமின் என்றார் என்க. “கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்ற லதுவே படைÓ என்னும் திருக்குறட் கருத்தையுடையது இச் செய்யுள். விரைந்து போர்க்கு எழுதல் வேண்டுமாகலின் சுருங்கச் சொல்லுமின் என்றார். | ( 62 ) | | 1193. | 3மானமர் நெடுங்க ணார்தம் மனமென வெஃகி மைந்த ரூனமி லகல மூழ்கி யுள்ளுறச் சிவந்த வொள்வா ளீனமா மருங்கி னாரா திரைக்கிடைந் தனல்ப வின்று தானவர் குருதி மாந்தித் தம்பசி தணியு மென்பார். | (இ - ள்.) மானமர் நெடுங்கணார் தம் மனம் என வெஃகி - மான்கண்போன்ற நெடிய கண்களையுடைய இளமகளிர்களுடைய நெஞ்சம் தம் காதலரின் அகலத்தை விரும்புமாறு போலே, மைந்தர் ஊனமில் அகலம் மூழ்கி - மறவர்களினுடைய குற்றமற்ற மார்பினை விரும்பி அதன்கண்புக்கு முழுகி, உள்ளுற - உடலுள்ளே பொருந்துதலாலே, சிவந்த ஒள்வாள் -சிவப்புடையதாகிய ஒளியுடைய நம்முடைய வாட்படைகள், ஈனமா - தமக்கு இளிவரவுண்டாக, மருங்கின் ஆராது - நம் இடையில் கட்டுண்டு கிடந்து பசித்து, இரைக்கு இடைந்து - தம் இரையை வேட்டு வருந்தி, அனல்ப - கொதிக்கின்றன, இன்று - இன்றைக்கு, தானவர் குருதி மாந்தி - அவ்வச்சுவகண்டனே முதலிய விச்சாதரருடைய குருதியைப் பருகி, தம் பசி தணியும் என்பார் - தம் பசி தீரப்பெறும் என்று கூறுவார், (எ - று.) | |
| (பாடம்) 1 லாமோ. 2 சுவையெனத். 3மானமார். | | |
|
|