பக்கம் : 761 | | (இ - ள்.) இன்னன பிறவும் ஏனைஇருநிலத்து அரசர் பேச - இன்னோரன்னவும் பிறவுமாகிய மறமொழிகளை மற்றவராகிய பெரிய நிலத்தை ஆளும் அரசர்கள் இயம்பாநிற்ப, மன்னவகுமரன் - பயாபதி மன்னன் மகனாகிய திவிட்டன், மாமன் மலர்அடி வணங்கி - தன் மாமனாகிய சடிவேந்தனுடைய மலர்போலும் திருவடிகளிலே வணக்கம் செய்து, வாழ்த்தி - புகழ்ந்து வாழ்த்தி, மின்னொடு விளங்கு வேலோய் - மின்னலைப் போன்று திகழ்கின்ற வேற்படையை யுடையோனே, உளங்கொடு விளம்பி என்னை - இந்நிகழ்ச்சியை நெஞ்சிலேகொண்டு பலபடப் பாரித்துப் பேசுவதாற் பயன் என்னாம், இனி இப்பால் வருவது - இனி இதற்குமேல் நிகழ்வது அனைத்தும், என்னொடு படுவது அன்றோ - என்னுடைய பொறுப்பிலே படுவன ஆகும் என்று கூறினான், (எ - று.) இவ்வாறு இருநிலத்தரசர் பலப்பல பேசத் திவிட்டநம்பி மாமனை வணங்கி, இங்ஙனமெல்லாம் பேசின் என்னாம் ? மேலே வருவன வெல்லாம் என்னொடு பட்டன என்றான் என்க. யானே அவரை முழுதும் வெல்வல் ஏனையோர் பேசவேண்டா என்றபடி. | ( 70 ) | சடிமன்னன் திவிட்டனுக்குப் போர்மந்திரம் செவியறிவுறுத்தல் | 1201. | ஆங்கவன் மொழிந்த போழ்தி னமையுமிஃ 1திழிவ தன்றே தேங்கம ழலங்கன் மார்ப வினிச்சிறி துண்டு நின்ற தோங்கிய விஞ்சை நின்னா லுள்ளத்துக் கொள்ளற்பால வீங்கிவை யென்ன லோடு மிறைவனைத் தொழுது கொண்டான். | (இ - ள்.) ஆங்கு அவன் மொழிந்த போழ்தின் - அவ்வாறு திவிட்டநம்பி கூறியவுடனே, இஃது இழிவது அன்றே - இவ்வாறு நீ கூறுதல் உன் தகுதிக்குப் பொருந்துவதல்லது கீழ்மையுடைத்தன்று, தேங்கமழ் அலங்கல் மார்ப - தேன்மணங்கமழும் மலர்மாலையை அணிந்த மார்பனே, இனிச் சிறிதுண்டு நின்றது - இனிமேல் நினக்குக் கூற வேண்டிய செய்தியும் ஒன்று என்பால் நின்றது, அஃதியாதெனில், ஓங்கியவிஞ்சை - என்னிடத்துள்ள உயர்ந்த வித்தைகள், நின்னால் உள்ளத்துக் கொள்ளற்பால - அவை உன்னால் பயிலப்பட்டு உனது நெஞ்சத்தே மறவாதேகொண்டு ஓம்பப்படும் தகுதியுடையன, ஈங்குஇவை என்னலோடும் - அம்மந்திரங்கள், இன்னவைகளாம் என்று அவையிற்றைச் செவியறிவுறுத்தவுடனே, இறைவனைத் தொழுதுகொண்டான் - சடிமன்னனை வணங்கித் திவிட்டநம்பி அம்மறை மொழிகளை ஓதி உள்ளத்தேகொண்டான், (எ - று.) | |
| (பாடம்) 1தறிவ. | | |
|
|