பக்கம் : 765 | | விண்களை என்புழி கள் அசை எனலுமாம். கண்கள் தீக்காலுதலாலே, தம்புலன்களைக் காணமாட்டா வாயின; முத்தம் போன்று உடலில் வியர்வை துளித்தது; தூதர் உரைத்த புன்சொல் காரணமாக நம்பி விண்ணைத் தன் சினத்தீயால் வெதுப்பினன், என்க. | ( 76 ) | திவிட்டன் சினம் | 1207. | நகுதொறு மழற்கொடி 1நடுங்கு நுண்டுளி யுகுதொறு மயிர்த்துளை யுயிர்க்கும் வெம்புகை புகுதொறுஞ் செவிசுடு புன்சொ லாரழன் மிகுதொறும் விசும்புற நிமிர்ந்து காட்டினான். | (இ - ள்.) நகுதொறும் அழற்கொடி நடுங்கும் - சினத்தால் நகைதோன்றும் அமயமெல்லாம் அந்நகைக்கண் தீக்கொழுந்துகள் தோன்றி அசையா நிற்கும், மயிர்த்துளைதொறும் நுண் துளிஉகும் - மயிர்க்கால்கள்தோறும் வியர்வையாகிய சிறிய துளிகள் உதிரா நிற்கும், வெம்புகை யுயிர்க்கும் - வெவ்விய புகைப்படலங்களை மூக்குத்துளைகள் உயிர்க்கும், புகுதொறும் செவிசுடும் புன்சொல் ஆரழல் மிகுதொறும் - நுழையும் தொறும் செவிகளைச் சுட்டெரிக்கும் இயல்பினவாய அத்தூதர் உரைத்த இன்னாச் சொல்லால் உண்டாகிய சினத்தீ தன் நெஞ்சத்தே பெருகும் பொழுதெல்லாம், விசும்புற நிமிர்ந்து காட்டினான் - தன் மேனி விண்ணைப் பொருந்துமாறு வளர்ந்து தோற்றுவானாயினன், (எ - று.) தூதர் கூறிய புன்சொல்லை நினையுந்தோறும், அவை சுடுதலால், நம்பி உருவம் அது சுடுந்தொறும் உயர்ந்து நிமிரலாயிற் றென்க. | ( 77 ) | | 1208. | தோற்றமுஞ் சுடரொளி வடிவு 2முன்னிலா வேற்றுமை யுடையவாய் விரிந்து தோன்றின மாற்றமஃ தொழிந்தனன் 3மனித்த னன்மையைத் தேற்றினன் றிருமகிழ் தெய்வக் காளையே. | | |
| (பாடம்) 1 நுடங்கு. 2மூன்றிவர், முன்றிவர். 3மனிதனன்மை. | | |
|
|