பக்கம் : 766 | | (இ - ள்.) தோற்றமும் சுடர்ஒளி வடிவும் - சாயலும் மிளிருகின்ற ஒளியையுடைய மேனியும், முன்இலா வேற்றுமையுடையவாய் - முன்னர் எக்காலத்தேயும் காணப்படாத வேற்றுமையுடையனவாக, விரிந்து தோன்றின - பாரித்துக் காணப்பட்டன, மாற்றம் அஃதொழிந்தனன் - பேச்சிலாதவனானான், மனித்தன் அன்மையைத் தேற்றினன் திருமகிழ் தெய்வக்காளை - இலக்குமியாகிய சுயம்பிரபையை மணந்து மகிழ்ந்தவனாகிய கடவுட்டன்மையுடைய திவிட்டநம்பி இவ்வாற்றால் தான் மனிதன் அல்லாமையை அறிவிப்பவனாயினன், (எ - று.) நம்பியின் வடிவம் முன்னென்றும் இலாதவாறு பெருகித் தோன்றிற்று. இதனால் திவிட்டநம்பி தான் மானிடன் அன்மையை உலகறியச் செய்தான் என்க. தான் வாசுதேவனே என்பதை உணர்த்தினன் என்பது கருத்து. | ( 78 ) | அமரர் செயல் | 1209. | மாண்டன 1மாற்றலர் நாள்கள் பூமக ளீண்டுவந் திவனொடு திளைக்க லுற்றனன் காண்டுமிக் காளைதன் கன்னிப் 2போரெனா வீண்டினர் விண்ணிடை யமர ரென்பவே. | (இ - ள்.) அமரர் - தேவர்கள், மாற்றலர் நாள்கள் மாண்டன - இத்திவிட்ட நம்பிக்குப் பகைவராயினார் வாழ்நாள்கள் அனைத்தும் முடிந்தொழிந்தன, பூமகள் - திருமகள், ஈண்டு வந்து இவனொடு திளைக்கலுற்றனள் - இவண் (இப்போதனத்தே) அதர்வினாய்வந்து இத்திவிட்டநம்பியைப் புணர்ந்தனள், இக் காளைதன் கன்னிப்போர் காண்டும் எனா - யாமும் இத்திவிட்டனுடைய முதற்போரின் சிறப்பினைக் கண்டு களிப்பேமாக என்று கூறி, விண்ணிடை ஈண்டினர் என்பவே - விசும்பின்கண் வந்து குழீயினர் என்று அறிஞர் கூறுவார்கள், (எ - று.) அவ்வுருவினைக் கண்ட அமரர்கள், இவன் பகைவர் இன்றோடே அழிந்தனர்; திருமகள் இன்றே நம்பியை மருவினள்; யாமும் நம்பியின் கன்னிப் போரினைக் காண்டும், என்றனர் என்க. துணிவுபற்றி மாண்டன என்றும் உற்றனள் என்றும் இறந்தகாலத்தாற் கூறினர் | ( 79 ) | தூதுவராகலின் இவர் உய்ந்து போக எனல் | 1210. | தூதுவர் முறைப்படுந் தொன்மை 3யாலிவண் டீதுரை கொணர்ந்துநஞ் செவிகள் சுட்டவிப் | | |
| (பாடம்) 1மாற்றவர், மற்றவர். 2போரென. 3யின்மையால். | | |
|
|