பக்கம் : 77
 
     நஞ்சு இவர் வேல் நரபதியை - நீண்ட மறக்கழலை யணிந்த நஞ்சு தடவப்பெற்ற
வேற்படையையுடைய பயாபதி மன்னனை; ஆஇடை - அவ்விடத்திலே; வெம்சுடர் வாளினர்
- வெவ்விய ஒளிபொருந்திய வாட்படையை யுடையவர்களும்; விசித்த கச்சையர் - இறுகக்
கட்டப்பெற்ற இடைக்கட்டை யுடையவர்களுமாகிய, கஞ்சுகி அவர்கள் - சட்டை அணிந்த
காவலர்கள்; மெய் காவல் ஓம்பினார் - திருமேனியைப் பாதுகாத்தல் செய்தார்கள். (எ - று.)

மஞ்சு - முகில். நரபதி - பயாபதி. கஞ்சுகி - வடசொல் என்பர். ஆயிடை - அப்பொழுது
என்றும் பொருள் கூறலாம். இடத்தை யுணர்த்துஞ் சொற்கள் காலப்பொருளையுங் குறிக்கும்.
 

 ( 23 )

அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்

93. வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
1ஏசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்.
 

     (இ - ள்.) வாசம் நீர் தெளித்து - மணங்கமழும் நீர் தெளிக்கப்பட்டு; அலர்பரப்பி -
மலர்கள் பரப்பப்பட்டு; வான் அகம் ஏசு நீள் இருக்கைய - விண்ணுலகத்தையும்
இகழும்படியான நீண்ட இடத்தையும் அவற்றின்கண் அணைகளையும் உடையனவும், இலங்கு
சென்னிய - விளங்குகின்ற முடியை யுடையனவுமான; மூசுதேன் நெடுங்கடை மூன்றும் -
நெருங்குகின்ற வண்டு களையுடைய நீண்ட திருவாயில்கள் மூன்றையும்; போய் - தாண்டிச்
சென்று; புறத்து ஓசை நீள்மண்டபம் அது - ஒலிகள் எதிரொலி செய்துபுறத்தே நீளுதற்குக்
காரணமான திருவோலக்க மண்டபமாகிய; உவந்தது எய்தினான் - தான் விரும்பியதனை
அடைந்தான். (எ - று.)

தெளித்து - தெளிக்கப்பட்டு; பரப்பி - பரப்பப்பட்டு என்க. வாசநீர் - பனிநீர் முதலியன.
அதனைத் தெளித்தல் மணமுண்டாதற்கும் துகளடங்கற்கும். அலர் பரப்புதல் அரசன்
அடிகளில் கல்முதலியன உறுத்தாதிருத்தற்கு. சென்னி என்றது மண்டபத்தின் மேலுள்ள
முடிகளை. ஓசை - புகழுமாம்.
 

(24)

     (பாடம்) 1. நறுமலர் தானுந். 2. தேவன்மாட்டு. தேனமாட்டு.