மானம் வேண்டுமோ - உயிரீந்தும் ஓம்பற்பாலதாகிய மானத்தை விரும்புவானோ, என் அவன் உவப்பது என்று - இவ்விரண்டில் வைத்து எதனை அவன் விரும்புகின்றான் என்பதனை, எண்ணி வம்மின் - அவனுடன் கூடி ஆராய்ந்து தெளிந்து மீண்டும் வருவீர், (எ - று.) இம்மொழிகள் அச்சுவகண்டன் தூதர் உரைத்த மொழிகளுக்குச் சமமான மொழிகளாதல் காண்க. |
( 85 ) |
தெய்வ மொழி உண்டாதல் |
1216. | என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர் சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி 1வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள். |
(இ - ள்.) என்று அவர் மொழிதலும் - என்று அம்மன்னர்கள் உரைத்தவுடனே, தூதுவர் எழுந்து சென்றனர் - அவையிற்றைக் கேட்ட விச்சாதரதூதர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லா நின்றனர், ஆயிடை - அந்தச் செவ்வியில், தெய்வ வாய்மொழி - தெய்வமாகிய அசரீரியின் மெய்ம்மொழி, “இவ்விடலையே வென்று வீற்றிருக்கும்“ என நின்றது - “இத்திவிட்டநம்பியே அச்சுவக்கிரீவனை வென்று நிலைத்திருப்பான் என்று எழா நின்றது, நிலமகள் பரிவு நீங்கினாள் - நிலம் என்னும் நல்லாள் அல்லல் தீர்ந்த நெஞ்சினள் ஆயினள், (எ - று.) என்று தூதர்க்குத் தகுந்த மாற்றங் கூறியவுடன் அவர் இறையருளால் உய்ந்தோமென எழுந்து போயினர்; அவ்வமயம், அசரீரி நம்பிக்கு வென்றி வீற்றிருக்கும் என்றது: நிலமகள் பரிவு தீர்ந்தாள் என்க. |
( 86 ) |
சுரமையிற் றோன்றிய நன்னிமித்தங்கள் |
1217. | வரிவளை முரன்றன வான துந்துபி திரிவன வறைந்தன செங்கண் டீப்பட முரிவன வீரர்தம் புருவ 2மூரிவிற் 3பரிவிறை 4யின்றிவன் பாடி வட்டமே. |
(இ - ள்.) இவன் பாடி வட்டம் - இத்திவிட்ட நம்பியின் இருக்கையிடமெங்கும், வரிவளை முரன்றன - வரிகள் பொருந்திய சங்குகள் முழங்கின, வானதுந்துபி திரிவன அறைந்தன - தேவதுந்துபிகள் எங்கும் சென்று சென்று முழங்கின, பரிவு இறையின்றி - ஒரு சிறிதும் இரக்கமில்லாமல், வீரர்தம் செங்கண் தீப்பட - மறவர்களுடைய கண்களிலே தீயுண்டாக, புருவ மூரியில் முரிவன - புருவங்களாகிய பெரிய விற்கள் வளைந்தன, (எ - று.) |
|
|
(பாடம்) 1 வென்றி வீற்றிருக்கும். 2மல்லது. 3 பரிவெனு. 4அடிக்குறிப்பு சரியாக தெரியவில்லை. |