பக்கம் : 773
 

     விடர், விடவரென நின்றது; காமவிருப்ப மிக்க ஆடவர் என்பது பொருள்.
ஆடவர்கள் விடுதற்கரிய பண்புகள் : ஆண்மை மானம் அன்பு போல்வன; இவை
யிலராயினமையில் காதல் செலுத்தற்குரிய மகளிர் இடத்தே பகைக்குணம் உடையராயினர்
என்றார். காதணி நழுவுதல் கணவர் சாவினைக்காட்டும் தீநிமித்தம் என்க.
 

( 91 )

இதுவுமது

1222. தூவொளி மணிமுடி 1சுடருங் கிம்புரி
2நாவளைக் கொண்டன நாம வென்றிவேல்
பூவொளி மழுங்கின போர்செ யாடவ
ரேவிளை கொடுஞ்சிலை யிற்று வீழ்ந்தவே.
 
     (இ - ள்.) தூஒளி மணிமுடி சுடரும் கிம்புரி - வெள்ளொளி முத்துக்களையுடைய
தலையணியின் கண்ணே ஒளிபரப்பும் கிம்புரி என்னும் முடியுறுப்புக்கள், நாவளைக்
கொண்டன - நடுவண் வளைவுடையவாயின; நாமம் வென்றிவேல் - அச்சுறுத்தும்
வெற்றியுடைய வேற்படைகள், பூஒளி மழுங்கின - கூர்மையும் ஒளியும் மழுங்கின,
போர்செய் ஆடவர் - போர்த்தொழிலைச் செய்யும் மறவருடைய, ஏவிளை கொடுஞ்சிலை -
ஏவுதற்றொழிலை விளைத்தற்கிடமான வளைந்த விற்கள், இற்றுவீழ்ந்தவே - தாமே முறிந்து
வீழ்ந்தன, (எ - று.)

நா - நாப்பண்; நடுவிடம். “நாவோடணவு நலந்திகழ், கூழையும் நடு என்றாகும்“ (திவாகரம்)
கிம்புரி வளைந்தன; வேல்கள் மழுங்கின; சிலை இற்று வீழ்ந்தன; என்க.
 

( 92 )

இதுவுமது

1223. உள்ளடி 3உமைத்துமைத் தழன்ற மேனியுங்
கள்ளவிழ் கண்ணியுங் கரிந்த கண்களு
மெள்ளுநர்க் கிடவயிற் றுடித்த வேழையர்
வள்ளிதழ்க் கருங்கணும் வலந்து டித்தவே.
    

     (பாடம்) 1முகந்த. 2 நாவணைக். 3உமித்துமித்து.