பக்கம் : 774
 

     (இ - ள்.) உள்ளடி உமைத்து உமைத்து அழன்ற - ஆடவர்களின் உள்ளங்கால்கள்
தினவெடுத்துத் தினவெடுத்து எரிவுற்றன, மேனியும் - உடலும், கள்ளவிழ் கண்ணியும் கரிந்த
தேன் துளிக்கும் மலர்மாலைகளும் கருகிப்போயின, எள்ளுநர்க்கு - திவிட்டன்
முதலியோரை இகழ்கின்ற விஞ்சையர்க்கு, கண்களும் இடவயின் துடித்த - கண்கள்
இடந்துடித்தன, ஏழையர் - மகளிர்களுடைய, வள்இதழ் கருங்கணும் - பெரிய
இமைகளையுடைய கரிய கண்களும், வலம்துடித்த - வலப்பக்கத்தே துடித்தன, (எ - று.)

உமைத்து - தினவெடுத்து: “உமைத்துழிச் சொறியப் பெற்றாம்“ என்றார்
சீவகசிந்தாமணியினும். உள்ளடிக்கண் தினவெடுத்தது; உடலும் மாலையும் கருகின;
ஆடவர்க்கும் மகளிர்க்கும் முறையே கண்கள் இடமும் வலமும் துடித்தன; என்க.
 

( 93 )

இதுவுமது

1224. வானமீ னுச்சியு ணின்ற 1மாற்றலர்
தானையு ணடுவுவீழ்ந் ததிரத் தங்களுக்
கூனமுண் டென்பதை யுணர்ந்து முள்ளிடை
மானமஃ தொழிந்திலர் மறங்கொண் மன்னரே.
 
     (இ - ள்.) உச்சியுள் - நண்பகற்போதில், நின்ற - மறையாமல் நின்ற, வானமீன் -
விண்மீன்கள், மாற்றலர் - பகைவராகிய அச்சுவகண்டன் முதலியோர், தானையுள் நடுவு -
படைகளின் இடையில், வீழ்ந்து அதிர - விழுந்து ஒலிக்க, தங்களுக்கு ஊனம் உண்டு
என்பதை உணர்ந்தும் - தமக்குக் கேடு அணித்தாய் உளது என்பதை இவ்வுற்பாதங்களால்
அறிந்துவைத்தும், மறங்கொள் மன்னர் - தறுகண்ணராகிய அவ்வரசர்கள், மானமது
ஒழிந்திலர் - தம் மாண்பிறந்த மானத்திற் றவிர்ந்தாரில்லை, (எ - று.)

நண்பகலில் மீன்கள் உதிர்ந்து அதிர்ந்தன; இத்தகைய தீநிமித்தங்களைக் கண்டும்,
அச்சுவகண்டன் முதலியோர் செருக் கொழிந்திலர், என்க.
 

( 94 )

தூதர் அச்சுவகண்டனுக்குக் கூறலும்
அவன் சினம் உறுதலும்

1225. போகிய தூதுவர் பொன்னவி ராழியொ
டேகிய நாளுடை யாற்கிது வாலென
வாகிய வாய்மொழி கூறலு மாயிடை
நாகம ழன்றெறி 2நச்சென நக்கான்.
    

     (பாடம்) 1மாற்றவர். 2நக்கென.