பக்கம் : 775
 

     (இ - ள்.) போகிய தூதுவர் - போதன நகரத்தினின்றும் சென்ற தூதர்கள், பொன்
அவிர் ஆழியொடு ஏகிய நாள் உடையாற்கு - அழகு விரிகின்ற ஆழிப்படையையும்
கழிந்துலந்த அகவையையும் உடையவனாகிய அச்சுவகண்டனுக்கு, ஆகிய வாய்மொழி
இதுவாலென - சுரமை நாட்டரசன் அவையில் தமக்குக் கிடைத்த மொழி இஃது என்று,
கூறலும் ஆயிடை - அங்கு நிகழ்ந்தவற்றை ஒழிவின்றிக் கூறியவுடனே, எறி நச்சு நாகம்என
அழன்று நக்கான் - கொல்லும் நஞ்சினையுடைய பாம்புபோலச் சீறி நகைத்தான், (எ - று.)

இனி ஆழியோடு சேர்ந்து அகன்றுபோன அகவையுடையாற்கு எனலும் ஒன்று. தூதுவர்
போதனநகரத்தே கிடைத்த செய்தியைக் கூறலும் நாகம் போலே அச்சுவகண்டன் சீறினான்
என்க.
 

( 95 )

அச்சுவகண்டன் சினமொழிகள்

1226. மண்டிணி மாநில மன்னரை மால்வரை
யொண்டொடி தாதையொ டுழுயிர் 1வௌவுபு
திண்டிறல் பேசிய வச்சிறி யானையுங்
2கொண்டனிர் 3கூடுதி 4ரோகடி தென்றான்.
 
     (இ - ள்.) மண் திணி மாநில மன்னரை - மண்செறிந்த பெரிய நிலத்தை ஆளும்
பயாபதி முதலிய வேந்தரையும், மால்வரை ஒள் தொடி தாதையொடு உயிர் ஊழ் வௌவுபு
- பெரிய மலையின் வாழும் ஒளியுடைய வளையலணிந்த சுயம்பிரபையின் தந்தையாகிய
சடிமன்னனையும் முறையே உயிரைக் கவர்ந்து கொண்டு, திண்திறல் பேசிய அச்
சிறியானையும் - உறுதியான ஆற்றல் உடைமை கூறிய அத்திவிட்டன் என்னும்
சிறுவனையும், கொண்டனிர் கூடுதிரோ கடிதின் என்றான் - பிடித்துக் கொண்டு எம்பால்
விரைந்து வரவல்லீரோ என்று கூறினான், (எ - று.)

மண்ணில் வாழும் மானிட அரசரோடே சடியையும் கொன்று, திவிட்டனைப் பற்றிக்கொண்டு
வரவல்லிரோ! என்றான் என்க. மன்னர் - பயாபதி விசயன் முதலியோர். சிறியான் -
திவிட்டன்.
 

( 96 )

விச்சாதரர் போர்க்குப் புறப்படுதல்

1227. ஆழியி னானது கூறலு மாயிடை
வாழிய ரோவென மால்வரை 5வாழ்பவர்
 
    

     (பாடம்) 1 வௌவி. 2 கொண்டடொளிர். 3 வம்மின. 4 மோகடி. 5வாழ்வார்.