பக்கம் : 776
 

 

  சூழிய 1வானைகள் மாவொடு தேர்பல
2தாழலர் பண்ணினர் தாமு மெழுந்தார்.
 
     (இ - ள்.) ஆழியினான் அது கூறலும் ஆயிடை - அச்சுவகண்டன் அம்மொழி
கூறியவுடனே, மால்வரை வாழ்பவர் - பெரிய மலையிடை வாழும் மறவர்கள், வாழியரோ
என - வாழ்க என்று அச்சுவகண்டனை வாழ்த்தி, சூழிய ஆனைகள் மாவொடு பல தேர்
பண்ணினர் - நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும், குதிரைகளையும் பலவாகிய
தேர்களையும் ஒப்பனை செய்தனராய், தாமும் தாழலர் எழுந்தார் - தாங்களும்
காலந்தாழ்த்தாமல் விரைந்து போர்க்குப் புறப்பட்டனர், (எ - று.)

(1226) இச்செய்யுள்களும் (1227) அடுத்த செய்யுளும் - ஓர் ஏட்டுச் சுவடியில் முன்பின்
மாறியுள்ளன என்ப. உடனே மன்னர்கள் படை பண்ணுறுத்தி, விரைந்து போர்க்
கெழுந்தனர், என்க.
 

( 97 )

இதுவுமது

1228. காரணி கண்முர சார்த்த கறங்கின
நீரணி சங்க 3நிரைந்தன வெம்பறை
தாரணி தானை சிலம்பின தாழ்ந்தனர்
போரணி விஞ்சையர் பூமியின் மேலே.
 
     (இ - ள்.) கார் அணி கண் முரசு ஆர்த்த - முகிலென முழங்குங் கண்ணையுடைய
முரசங்கள் முழங்கின, நீர் அணிசங்கம் கறங்கின - நீரிற் றோன்றுமியல்பினவாய அழகிய
சங்குகள் ஒலித்தன, வெம்பறை நிரைந்தன - வெவ்விய போர்ப் பறைகள் முழங்கின, தார்
அணிதானை சிலம்பின - தூசிப் படையாக வகுக்கப்பட்ட படைகளும் ஆரவாரித்தன,
போர் அணி விஞ்சையர் பூமியின் மேலே தாழ்ந்தனர் - இவ்வாறு போர்த்தொழிலின்
பொருட்டு அணிவகுத்துச் சென்ற விச்சாதரர்கள் நிலத்தின்மேல் இறங்குவாராயினர், (எ -
று.)
அவ்வழி முரச முதலிய முழங்கின; விஞ்சையர் பூமியின் மேலே இறங்குவாராயினர், என்க.
 

( 98 )

 

1229. குடையுங் கொடியுங் குளிர்சா மரையும்
படையும் முடியும் பலசின் னமுமே
யிடையும் புடையும் மிருபா லகமு
மடையும் 4படையும் மறிதற் கரிதே.
 
    

 


     (பாடம்) 1மாவொடுதோல்பல. 2தாழ்பல. 3நிரைந்தன. 4புடையும்.