பக்கம் : 777
 

     (இ - ள்.) குடையும் கொடியும் குளிர்சாமரையும் - குடைகளும் கொடிகளும்
தட்பந்தரும் கவரிமயிர்க் கற்றைகளும், படையும் முடியும் பல சின்னமுமே -
போர்க்கருவிகளும் முடிக்கலன்களும் இன்னோரன்ன பிற போர்ச்சின்னங்களும், இடையும்
புடையும் இருபால் அகமும் - நடுவிடத்தேயும் முன்பின்னிடங்களினும் இருபக்கங்களின்
அகத்தேயும், அடையும் - செறிந்தனவாதலின், படையும் அறிதற்கு அரிதே - அப்படை
தானும் யாரானும் அளவிட்டறிதற்கு அரிதாயிற்று, (எ - று.)

இதுவும் படையெழுச்சியே கூறிற்று. சின்னம் - தாரை யெனினுமாம்.
 

( 99 )

அச்சுவகண்டன் படை சுரமைநாட்டினை எய்துதல்

1230. பொன்றவழ் தேர்கலி மாவொடு 1போதக
மென்றிவை யெங்கு மிடம்2பிறி தின்றி
நின்றன நின்றது வாட்படை யப்படை
3சென்று பெருந்திசை யார்த்தனர் சேர்ந்தார்.
 
     (இ - ள்.) பொன் தவழ் தேர் கலிமாவொடு போதகம் - பொன்னிறம் தவழ்கின்ற
தேர்களும் புரவிகளோடு யானைகளும், என்று இவை எங்கும் இடம் பிறிது இன்றி நின்றன
- என்று கூறப்பட்ட இம்மூவகைப் படைகளும் தாந்தாம் நின்றவிடமன்றி இயங்குதற்குப்
பிறிதிடம் எவ்விடத்தும் பெறாமையால் நின்றபடியே நின்றன, வாள்படை நின்றது -
வாளேந்திய காலாட்படை முன் அணியில் நின்றது, அப்படை - அக்காலாட்படை மறவர்,
சென்று பெருந்திசை ஆர்த்தனர் சேர்ந்தார் - போய்ப் பெரிய திசைகள் அதிர
ஆரவாரித்துச் சுரமை நாட்டை எய்தினர், (எ - று.)

தேரும் யானையும் குதிரையும் நெருங்கி இயங்க இடம் பெறாமல் நின்றன; முன்னின்ற
காலாட் படை. சுரமைநாட்டை எய்திற்று.
 

( 100 )

அப்படைகள் போதனநகரத்தை அடைதல்

1231. கொண்டல் கிளர்ந்து பரந்து 4குவிந்தலை
மண்டுவ போன்மண மாநகர் முன்னி
விண்டவழ் மின்னிடு வாளினர் வில்லின
ரெண்டிசை யும்மிருள் கூர விழிந்தார்.
    

     (பாடம்) 1 வாரணம். 2 பிறவின்றி. 3 சென்று பெருந்திசை யார்த்திசை யார்த்தார். 4 பெருங்கடல்.