பக்கம் : 779 | | | | தேரொடு தேர்கலி மாவொடு மாபல போரொடு வந்து புகுந்தன வன்றே. | (இ - ள்.) காரொடுகார் - முகில்களுடனே முகில்களும், கடலோடு கருங்கடல் - கடலுடனே கரிய கடல்களும், சீரொடு சென்று எதிர் நேர்வனபோல்வன - சிறப்போடு சென்று எதிர்ப்பன போல்வனவாய், தேரொடு தேர் - தேர்களுடனே தேர்களும், கலிமாவொடு மா - புரவிகளுடனே புரவிகளும் போரொடு - போர்த்தொழிலோடு, வந்து புகுந்தன அன்றே - நெருங்கி வந்து போர்செய்யப் புகுந்தன, அன்றே: அசை, ( ) கார் தேருக்கும், கடல் - குதிரைக்கும் உவமை. தேருந் தேரும், புரவியும் புரவியும், முகிலோடு முகில் போன்றும் கடலோடு கடல்போன்றும் எதிர்ந்து பொருதன, என்க. | ( 103 ) | காலாட்படை, யானைப்படை | 1234. | இலையே ரயில்வா ளியொடெண் டிசையுஞ் சிலையே யெனவுண் டுசிலைத் தொழுதி மலையே மலையோடு 1மலைந் தனபோற் கொலைவே ழமொடேற் றனகுஞ் சரமே. | (இ - ள்.) இலைஏர் அயில் வாளியொடு எண்திசையும் சிலையே உண்டு எனச் சிலைத்தொழுதி - இலையால் எழிலுடையவாகிய கூரிய அம்புகளோடே எண் திசைகளினும் விற்படைகளே நிரம்பியுள்ளன என்று கூறுமாறு உளவாயின விற்படைக் கூட்டங்கள், மலையே மலையோடு மலைந்தனபோல் - மலைகள் மலைகளோடு போராற்றினாற் போன்று, கொலை வேழமொடு குஞ்சரம் ஏற்றன - கொல்லுதற் றொழிலையுடைய யானைகளுடனே யானைகள் போர் ஆற்றின, (எ - று.) எங்கும் கணைகளும் விற்களுமே உளவாயின என்னும்படி விற்படைமிக்குத் தம்முட் பொருதன; மலையோடு மலை பொருதாப் போலே, யானையோடு யானைகள் முட்டின, என்க. | ( 104 ) | குதிரைப்போர் | 1235. | கொடிமே லுடையா 2னைகள்கும் பமுதைத் தடிமே லனவா கவெழுந் தரசர் முடிமே லனவா முகின்மே லனவாய்ப் படிமே லனவா யினபாய் பரியே. | | |
| (பாடம்)1 மலைத். 2 யானையள். | | |
|
|