பக்கம் : 780 | | (இ - ள்.) படிமேலன - நிலத்தின்கண் வந்தனவாகிய, பாய்பரி - விரைந்து பாய்கின்ற குதிரைகள், கொடிமேல் உடை யானைகள் கும்பம் உதைத்து - பிடர்மேலே கொடிகளையுடைய யானைகளின் மத்தகமுடியை உதைத்துருட்டி, அடிமேலனவாக எழுந்து - தம் கால்கள் விசும்பிடத்தன வாகும்படி மேலே பாய்ந்தெழுந்து, அரசர் முடிமேலனவா - மன்னர்களின் தலையணிகலன்களின் மேலனவாகவும், முகில் மேலனவாய் - மேகங்களின் மேலனவாகவும், வாயின - தாவின, (எ - று.) ஆயின எனினுமாம். புரவிகள் யானையின் மத்தகத்தே உதைத்தெழுந்து, மன்னர்முடி மேலும், முகில்மேலும் தாவி ஓடின என்க. | ( 105 ) | | 1236. | ஒருபான் முடிமே லுருளா ழியுதைத் திருபா லுமெழுந் தெறிபா றுசெலப் பொருபா லவர்கண் சுழலப் பொருதேர் வருபா லறியா மைமயங் கினவே. | (இ - ள்.) ஒருபால் - ஒரு பக்கத்தே, பொருதேர் - போர் ஆற்றும் தேர்ப்படைகள், முடிமேல் உருளாழி - மாண்டு வீழ்ந்தோர்தம் தலைகளின் மேலே உருள்கின்ற தம் சக்கரங்கள், உதைத்து - உதைத்தலானே, எறிபாறு - ஊன் எறிதலையுடைய பருந்துகள், எழுந்து இருபாலும் செல - எழுந்து இரு புறங்களினும் பறந்து போகா நிற்பவும், பொரு பாலவர் கண்சுழல - போர் புரிகின்ற மறவர்களுடைய கண்கள் (செல்ல இடம் பெறாமே) சினத்தாற் சுழலா நிற்பவும், வருபால் அறியாமை - வரும் வழியறியாமல், மயங்கின - மயங்குவனவாயின. ஒருசார் தேர்கள் முடிகளின் மேலே உருளப் பருந்துகள் பறந்து போகா நிற்பச் செல்வழி யறியாதே மயங்கின, என்க. உடையார் மயக்கம் உடைமைமேலேற்றிக் கூறப்பட்டது. | ( 106 ) | யானைப்போர் | 1237. | நெறியார் நிரைமா வொடுதேர் களெடுத் தெறியா வுதையா நுதலே றுகரம் பறியா முறியாப் படையோர் படையுட் செறியா மதயா னைதிரிந் தனவே. | | |
|
|