பக்கம் : 781 | | (இ - ள்.) மதயானை - மதக்களிப்புடைய யானைகள், படையோர் படையுள் செறியா - தத்தம் பகைவர்களின் படைகளூடே புகுந்து நெருங்கி, நுதல் ஏறுகரம் - நெற்றியிற் பொருந்துதலையுடைய துதிக்கைகளாலே, பறியா முறியா - பகைவர்களின் கருவிகளைப் பறித்தும் முறித்தும், நெறியார் - வழியிலே பொருந்திய, நிரைமாவொடு - அணிவகுக்கப்பட்ட புரவிகளுடனே, தேர்கள் எடுத்து எறியா உதையா - தேர்களையும் தூக்கி எறிந்தும் உதைத்தும், திரிந்தன - திரியா நின்றன, (எ - று.) யானைகள் படையினூடே புகுந்து, தேர்களை எடுத்தெறிந்தும், கைகளாலே பகைவர் கருவிகளைப் பறித்தும், முறித்தும் திரிந்தன. | ( 107 ) | காலாட் படை | 1238. | கடுநீ ரவர்கண் ணெரிகொண் டுகனன் றிடிநீ ருருமின் னெதிரே யெறிய வடிநீ ரன1வா ளிடையே முரியாப் படுமீ னெனவீழ்ந் துபதைத் தனவே. | (இ - ள்.) கடுநீரவர் - இருபடையினும் உள்ள வன்கண்மையுடைய வாள்மறவர்கள், கண் எரிகொண்டு கனன்று - கண்களிலே சினத்தீயைக்கொண்டு வெகுண்டு, இடிநீர் உருமின் இடிக்கும் இயல்புடைய இடிபோன்று, எதிரே எறிய - ஒருவர்க்கொருவர் எதிராக வீச, வடிநீரன வாள் - வடிக்கப்பட்ட பண்பாலுயர்ந்த வாள்கள், இடையே முறியா - ஒன்றனோடு ஒன்று தாக்குதலாலே நடுவண் முறிந்து, படுமீன் என வீழ்ந்து பதைத்தன - வானின்று வீழ்ந்துபடும் மீன் தரையிடத்தே வீழ்ந்து துடிப்பதுபோன்று நிலத்தே வீழ்ந்து துடித்தன, (எ - று.) படுமீன் - வலையிற்பட்ட கரையிடத்தே எறிந்த மீனுமாம். மறவர் கனன்று வீசிய வாள்கள் ஒன்றோடொன்று தாக்கி, இடையே முறிந்து, மண்மேலே மீன்போல் வீழ்ந்து துடித்தன, என்க. | ( 108 ) | வில் அறுபட்டமை | 1239. | வடிநூ னுதிகவ் வியவா ளையொடும் விடுமீ னெறிதூண் டில்விசைத் தனபோ லடுநா ணிடையே றியவம் பினொடு நெடுநா ணறவிற் கணிமிர்ந் தனவே. | | |
| (பாடம்) 1வாளிடையே. | | |
|
|