பக்கம் : 783 | | | | பொன்மலை யொன்றொடு போர்செய மேவிய மன்மலை போலவெ ழுந்து1ம லைந்தார். | (இ - ள்.) தென்மலையார் திறன் மன்னவன் - தென்மலையில் வாழ்வோர்தம் ஆற்றல் மிக்க அரசனான அருக்க கீர்த்தியின், மன்னிய வில் தனி மலைவார் இன்மையின் - கையிடத்தே நிலைபெற்ற வில்லினைத் தனியே நின்று எதிர்த்துப் போராற்றும் ஆற்றலுடையார் ஒருவரேனும் தம்முள் இல்லாமையால், விஞ்சையர் - அவ்விச்சாதரர், பொன்மலை ஒன்றொடு போர் செய மேவிய - ஒரு பொன்மலையோடே போராற்றப்புக்க, மன்மலை போல எழுந்து மலைந்தார் - பலமலைகள் ஒன்று கூடினாற் போன்று கூடிப் போர் செய்தனர், (எ - று.) மன்மலை என்புழி ஈண்டு மன் ஆக்கப் பொருட்டாய் பன்மை குறித்து நின்றது. அருக்ககீர்த்தியோடே தனி நின்று போர்மலையும் ஆற்றலுடையார் இன்மையின், ஒரு மலையோடே பலமலைகள் பொருதாற் போன்று, பல மன்னரும் ஒருங்கே கூடிப் போரிடலானார் என்க. | ( 111 ) | | 1242. | கோளென நாளென மின்னுபு குன்றெறி வேளனை யான்மிசை விஞ்சையர் வெஞ்சுடர் வாளினர் வில்லினர் மால்வரை போல்வன தோளினர் தாளினர் தோன்றின ரன்றே. | (இ - ள்.) குன்று எறிவேள் அனையான்மிசை - குருகு பெயர்க்குன்றம் கொன்ற முருகவேளை ஒத்த அருக்ககீர்த்தி ஒருவன்மேல், விஞ்சையர் - விச்சாதரர், கோள் என நாள் என மின்னுபு - கோளும் நாளும்போலச் சுடரும், வெஞ்சுடர் வாளினர் வில்லினர் - வெவ்விய சுடருடைய வாளுடையோரும் வில்லுடையோரும், மால்வரை போல்வன தோளினர் தாளினர் - பெரிய மலைகளை ஒத்தனவாகிய தோள்கள் உடையோரும் கால்கள் உடையோருமாய், தோன்றினர் - வந்து மொய்த்தனர் : அன்றே, அசை, (எ - று.) கோள் - ஞாயிறு முதலியன ; நாள் - அசுவினி முதலியன. குன்றத்தினை எறிந்த செவ்வேளை அனைய அருக்ககீர்த்தியின் முன்னர்க் கோளும் நாளும் போன்று சுடரும் வாளினரும் வில்லினரும் தாளினரும் தோளினருமாய்க் குன்றமன்னார் பலர் மொய்த்தனர், என்க. | ( 112 ) |
| (பாடம்) 1 பரந்தார். | | |
|
|