பக்கம் : 784 | | | 1243. | தோன்றிய விஞ்சையர் 1மேற்றொடு வெங்கணை கான்றது திண்சிலை கான்றலு மேதிசை மான்றது மங்குல் பரந்தது காரிருள் நான்றது நண்ணலர் 2நண்ணல ரானார். | (இ - ள்.) தோன்றிய விஞ்சையர்மேல் தொடுவெங்கணை - அவ்வாறு தோன்றிய விச்சாதரர்மேல் தொடுக்கப்பட்ட வெவ்விய அம்புகளை, திண்சிலை கான்றது - அருக்க கீர்த்தியினுடைய உறுதியான வில் பொழியா நின்றது, கான்றலுமே - அவ்வாறு பொழிந்தவுடனே, திசை மான்றது - திக்குகள் மயங்கின, மங்குல் பரந்தது - அம்புகளால் கதிரவன் ஒளி மறைக்கப்பட்டு இரவு பரவிற்று, கார்இருள் நான்றது - கரிய இருள் தொங்கிற்று, நண்ணலர் - பகைவர்கள், நண்ணலர் ஆனார் - இவ்வில்லெதிர் அணுக ஆற்றாராய்ப் போயினர், (எ - று.) அருக்ககீர்த்தியின் சிலை கணை பொழிந்தவுடன் திக்குகள் மயங்கின. இருண்டன திசைகள். பகைவர் ஓடிப்போயினர் என்க. நாலுதல் ஈண்டுப் பரவுதல் என்னும் பொண்மேனின்றது. செறிந்தது எனினுமாம். | ( 113 ) | | 1244. | தூணிமு கத்தது 3சோர்விலொர் கையொரு பாணிமு கத்தது 4பண்புறு வெஞ்சிலை வேணுமு கத்தது மண்டலம் வெங்கணை காணுமு கத5தது வோவுணர் காலே. | (இ - ள்.) சோர்வுஇல் ஒர்கை - தன் தொழிலில் மடிவில்லாத அருக்ககீர்த்தியின் கைகளுள் ஒன்று, தூணிமுகத்தது - இடையறாது அம்புக்கூட்டின்கண் காணப்பட்டது பண்புறு வெஞ்சிலை - விற்படைக்குரிய பண்புகள் அனைத்தும் உடைய வெவ்விய வில், ஒரு பாணிமுகத்தது - மற்றொரு கையகத்தே காணப்பட்டது, வேணுமுகத்தது மண்டலம் - அவ்வில்லிடத்தே இடையறாதொரு வட்டவடிவமே காணப்பட்டது, உணர்காலே - ஆராய்ந்துணரும்பொழுது, வெங்கணை காணும் முகத்ததுவோ - வெவ்விய கணைகளோ வெனில் எம்மனோரால் கண்டுரைக்கும் தன்மையவல்ல, (எ - று.) பாணி - கை. | |
| (பாடம்) 1 மேல்விடு. 2 நாணல. 3 கைத்தல மற்றறறையோர். 4 வெஞ்சிலை நின்றது. 5 தன; தளவேயுளவாமே. | | |
|
|