பக்கம் : 787 | | | 1249. | இடுதவி சொடுதொடர் 1பிரிய 2வெந்தகத் தடுசரம் படுதொறு மலறி வாலதி நெடிதென நிறுத்திநீ ருகுத்து நீள்செவி மடிதர முடுகின மான யானையே. | (இ - ள்.) இடு தவிசொடு - எருத்தின்மேல் இடப்பட்ட இருக்கைகளுடனே, தொடர்பு - வரிசையும், இரிய - குலைந்து ஒழியும்படி, அகத்து - தம் உடலின் ஊடே, அடுசரம் படுதொறும் - கொல்லுதலுடைய கணைகள் பாயுந்தோறும், வெந்து - மனம்வெம்பி, அலறி - பிளிறொலி செய்து, நீர் உகுத்து - கண்ணீர்சொரிந்து, நீள்செவி மடிதர - அச்சத்தால் நீண்ட செவிகள் மடிந்துகிடப்ப, வாலதி நெடிதென நிறுத்தி - தம் வால் நீளிது என்னும்படி தூக்கி, மானயானை முடுகின - பெரிய யானைகள் விரைந்து புறமிட்டோடின, ஏ : அசை, (எ - று.) பகைவர்கள் அணிவகுத்து நடத்திச் சென்ற யானைகள் கணைபடுந் தோறும், அலறிச் செவிமடிதர, வாலைத் தூக்கிக்கொண்டு உடைந்தோடின, என்க. | ( 119 ) | வாலதி - வால். | 1234. | முரசுக ளுடைந்தன முடிகண் மூழ்கின வரசுக ளவிந்தன வரவத் தேர்க்குழாம் வரைசெல விவுளிக ளிடறி வெந்தடி நிரைசெல விழிந3தது குருதி நீத்தமே. | (இ - ள்.) முரசுகள் உடைந்தன - முரசுகள் நொறுங்கின. மூடிகள் மூழ்கின - முடியணிகள் குருதியில் முழுகிப்போயின, அரசுகள் அவிந்தன - அரசர்கள் மாண்டனர், அரவத்தேர்க்குழாம் விரைசெலல் இவுளிகள் இடறி - ஒலிமிக்க தேர்க்கூட்டத்தினையும் விரைந்த செலவினையுடைய குதிரைகளையும் உருட்டிக்கொண்டு, வெந்தடி நிரைசெல - வெவ்விய ஊன்கள் வரிசை வரிசையாய் மிதந்து செல்லும்படி, குருதி நீத்தம் இழிந்தது - செந்நீர் வெள்ளம் ஒழுகிற்று, (எ - று.) முரசங்கள் நொறுங்கின; முடிகள் குருதியில் மூழ்கின; அரசர்கள் மாண்டனர்; தேர்களையும்; குதிரைகளையும் ஈர்த்துக்கொண்டு குருதி வெள்ளம் ஓடிற்று, என்க. | ( 120 ) | தம் படை உடைந்தமை தூதர் அச்சுவ கண்டனுக்கு உரைத்தல். | 1251. | காலெதிர் கடலுடைந் திட்ட தொப்பநம் பாலது படையுடைந் திட்ட தின்றென | | |
| (பாடம்) 1பரிய. 2வேந். 3வழிந்தது. | | |
|
|