பக்கம் : 788 | | | | மாலெதிர் கடற்படை மான வேந்தனைக் கோலெதிர் கையவன் றொழுது கூறினான். | (இ - ள்.) கால் எதிர் கடல் உடைந்திட்டது ஒப்ப - பெருங்காற்றின் முன்னர்க் கடல் உடைந்து ஓடுவதுபோன்று, நம்பாலது படை - நம்முடையவாகிய படை, இன்று உடைந்திட்டது என - இற்றைப் போரின்கண் புறமிட்டது என்று, கோல் எதிர் கையவன் - கோற்பிடித்த கையையுடைய தூதன் ஒருவன், மால் எதிர் கடற்படை மான வேந்தனை - பெரிய கடல்போன்ற போர் எதிர்க்கும் படையையுடைய மானம் மிக்க அச்சுவகண்டனை, தொழுது கூறினான் - வணங்கிக் கூறுவானாயினான், (எ - று.) இவ்வாறு படைகள் உடைந்தமை கண்ட ஒரு தூதன் விரைந்து தன் அரசனாகிய அச்சுவகண்டனுக்குக் கூறினன் என்க. | ( 121 ) | இதுவுமது | 1252. | நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும் வேற்பயங் கொண்டனர் 1விரவ லார்நமர் காற்பயங் கொண்டனர் கால வேலினாய். | (இ - ள்.) நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போல் - மெய்ந் நூல்களின் பயன்கள் பலவற்றைத் தன்பாற் கொண்டு நுணுகிய கேள்விச் செல்வத்தைப்போன்று, பயம் பலவொடு புகழ்களே தரும் - பல்வேறு பயன்களுடனே சிறந்த புகழையும் அளிப்பதாகிய, வேல் பயம்கொண்டனர் விரவலார் - வேற்படையின் பயனாகிய வெற்றியை நம் பகைவர்கள் கொள்வாராயினர், நமர் - நம் படைஞர்கள், கால் பயம் கொண்டனர் - வலிய காலாற் பெறும் பயனாகிய தோற்றுப் புறமிட்டோடி உய்தலைப்பெற்றனர், காலவேலினாய் - மறலிபோன்ற வேற்படையுடைய வேந்தே, (எ - று.) அங்ஙனம் கூறுகின்ற தூதன், பகைவர் வேலாலாய பயனை அடைந்தனர்; நமர் காலாலாய பயனை யடைந்தனர், என்றார் என்க, வேற்பயன் - வெற்றி. காற்பயன் - உடைந்தோடி உய்தல். | ( 122 ) | இதுவுமது | 1253. | பெரியவாய்ப் 2பிறையெயி றிலங்க நக்குநக் குரியவா ளெரியெழ 3வோச்சி நம்மொடு | | |
| (பாடம்) 1 தெவ்வர் நத்தமர். 2 வளையெயி. 3முறுக்கி. | | |
|
|