பக்கம் : 789 | | பொரியவந் தார்களும் புறந்தந் தாரினி யரியதென் னெனநக்கா ரவனி மன்னரே. | 1247. | பொரியவந் தார்களும் புறந்தந் தாரினி யரியதென் னெனநக்கா ரவனி மன்னரே. | (இ - ள்.) பெரிய வாய்ப் பிறை எயிறு இலங்க நக்கு நக்கு - தம் பெரிய வாயின் கண்ணவாகிய பிறைபோன்று வளைந்த பற்கள் திகழும்படி சிரித்துச் சிரித்து, உரிய வாள் எரியெழ - தமக்குரிய வாட்படைகளிலே தீப் பிறக்குமாறு வீசி, நம்மொடு பொரிய வந்தார்களும் - நங்களுடனே போராற்ற வந்த விச்சாதரர்களும், புறந்தந்தார் - நம்மொடு போர் ஆற்ற இயலாதவராய் உடைந்து ஓடினர், இனி அரியது என் என - இனி நாம் ஆற்றுதற்கரிய செயல் யாதுளது என்றியம்பி, அவனி மன்னர் நக்கார் - அம்மண்ணுலகப்பேதை மானிடவேந்தரும் நம்மை இகழ்ந்து சிரிப்பாராயினர், (எ - று.) பொரிய - போர் செய்ய. தம் பெரிய வாயைப் பிளந்துகொண்டு, எயிறிலங்க நக்கு, நக்கு, வாளோச்சிப்பொர வந்தாரும் புறந்தந்தார் என அவனி மன்னர் நக்கார்; என்றான் என்க. | ( 123 ) | | 1254. | கலையினைக் கடந்தசொற் கன்னி காதல னலையினுக் குடைந்தில ரருக்கன் கையதோர் சிலையினுக் 1குடைந்துதஞ் சிறுமை நாணிநம் மலையினுக் கடைந்திலர் மான மன்னரே. | (இ - ள்.) கலையினைக் கடந்த சொல் கன்னி காதலன் - கலையாகிய செஞ்சொற் கவியின்பத்தினும் உயர்ந்த இன்பம் நல்கும் இனிய சொற்களையுடைய சுயம்பிரபையின் காதற் கொழுநனாகிய திவிட்ட.னுடைய, அலையினுக்கு உடைந்திலர் - போர்க்கு ஆற்றாது புறமிட்டாருமிலர், அருக்கன் கையது ஓர் சிலையினுக்கு உடைந்து - எளிய அருக்ககீர்த்தி என்பான் ஒருவன் பிடித்த ஒரே வில்லிற்கு ஆற்றாது புறங்கொடுத்து ஓடி, தம் சிறுமை நாணி, - தமது கீழ்மைச் செயலைத் தாமே நாணி, நம் மலையினுக்கு அடைந்திலர் - அரசே நம்முன்னர் வரவும் நாணி நம் மலைக்கேயும் வாராதவராயினர், மான மன்னர் - முன்னர் இங்கு மானம் பேசிய நம் மன்னர்கள், (எ - று.) மானவீரர் - இகழ்ச்சிக்குறிப்பு. திவிட்டனுக்கு ஆற்றாதோடினும் அத்துணை இழிவில்லை, எளிய அருக்கனுக்கே உடைந்தனர் நம் மாவீரர் என்றான், என்க. | ( 124 ) |
| (பாடம்) 1குடைந்ததஞ். | | |
|
|