பக்கம் : 79
 
     (இ - ள்.) குஞ்சரம் குழவி கவ்வி - யானைக்குட்டியைத் துதிக்கையாற்
பற்றியுள்ளதும், குளிர்மதி கோடுபோலும் அம்சுடர் எயிற்ற - குளிர்ச்சியுள்ள இளம்பிறை
வடிவத்தையொத்த அழகிய ஒளியுள்ள தந்தங்களையுடையதும் ஆகிய, ஆளி - யாளியினது;
அணிமுகம் மலர ஊன்றி - அழகிய முகத்தின் வடிவமாக அமைந்த படிக்கட்டினை மிதித்து;
செம்சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை - சிவந்த ஒளியையுடைய அழகிய பொன்னாற்
செய்யப் பெற்ற அரியணையின்மீது; சேர்ந்த செல்வன் - ஏறியமர்ந்த பயாபதி மன்னன்;
வெம்சுடர் உதயத்து உச்சி - விரும்பத்தக்க செவ்விய ஒளியோடு கிழக்கெழு மலையின்
முடியில்; விரிந்த வெய்யவனோடு ஒத்தான் - தோன்றி விளங்குகின்ற கதிரோனைப்
போன்று காணப்பட்டான். (எ - று.)

     பயாபதி மன்னன் ஏறியமர்ந்துள்ள அரியணைக்குரியபடி யானைக் குட்டியைத்
துதிக்கையாற் பற்றியுள்ள யாளியைக் கவ்வி மிதித்து நிற்கும் ஆளி வடிவமாகச்
செய்யப்பட்டுள்ளதென்க. இஃது அத்தியாளி எனப்படும். மடங்கலணைக்குக்
கிழக்கெழுமலையும் அரசனுக்குக் கதிரவனும் உவமை. குழவி - இளமையுடையது,
“மழவுங்குழவும் இளமைப் பொருள“ என்பது சூத்திரம். யானைக்குட்டி குழவியென்னும்
பெயரைப்பெறும் என்பது, “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை“ என்னுந்
தொல்காப்பியச் சூத்திரத்தாற் பெறப்படும்.

 ( 26 )

அரசன் குறிப்பறிந்து அமர்தல்

96. பூமரு புரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் 1கிழவர் 2மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் 3செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்.
 

     (இ - ள்.) பூமரு புரிந்த நுண்நூல் - பொலிவுடைய முறுக்கிய நுண்ணிய நூல்பூண்ட;
புரோகிதன் - வேள்வி யாசிரியனும்; பொறிவண்டு ஆர்க்கும் - புள்ளிகளையுடைய
வண்டுகள் ஒலிக்கும்; மாமலர் அணிந்த கண்ணி மந்திரக்கிழவர் - சிறந்த மலர்கள்
பொருந்திய மாலையை அணிந்த அமைச்சர்களும்; மன்னர் ஏமரு - தன்னோடு
பொருந்தாதவர்களான

 

     (பாடம்) 1. தம்மோடு, மன்னும்; 2. செங்கண் சைகை.