இரதநூபுரத்தை எரிப்பேம் எனக் கூறிச் சென்றோரும் நாணமின்றி உடைந்தோடி வந்தனர்; செயல்கள் தாமே நிகழ்கின்றன அன்றி, இதனை இவ்வாறு முடிப்பேம் என எண்ணி, எண்ணியாங்கு முடிக்கும் வீரர் நம் படையில் இலர் (என்று, மற்றொரு தூதன் உரைத்தான் என்க.) |
( 126 ) |
இதுவுமது |
1257. | பாழிப்போ ருடைந்தனர் பகைவர்க் கின்றென வாழிப்போர்த் தடக்கையாற் கவர்க ணீர்மையைத் தாழிப்1பேர் விலன்றம னொருவன் கூறினான் ஊழிப்பே ரெரியுணெய் 2யுகுத்த தொப்பவே. |
(இ - ள்.) பகைவர்க்கு இன்று பாழிப் போர் உடைந்தனர் என - (அன்னராதலால்) நம் பகைவர்களுக்கு நம் மன்னர்கள் அப் பகைவரூர்க்கண்ணே போரிற் றோற்றோடினர் என்று, அவர்கள் நீர்மையை -அம் மன்னர்களின் தன்மையை, தாழிப் பேர்விலன் தமன் ஒருவன் - கும்பன் என்னும் பெயருடைய விற்படையையுடையான் ஒரு தூதன், ஆழிப் போர்த்தடக்கையாற்கு - ஆழிப்படையையுடைய போர் ஆற்றல் மிக்க பெரிய கையினையுடைய அச்சுவகண்டனுக்கு, ஊழிப் பேரெரியுள் நெய் உகுத்தது ஒப்ப - ஊழிமுடிவின்கண்ணுற்ற பெரிய நெருப்பில் நெய் சொரிந்ததே போன்று, கூறினான் - சொன்னான், (எ - று.) பாழி - பகைவர் ஊர். தாழி - கும்பம். தமன் - தமர் என்பதன் ஒருமை; தூதன் என்றபடி. ஊழிப்பேரெரி சுரமையிலிருந்து வந்த செய்திக்குவமை, நெய் இரதநூதபுரச் செய்திக்குவமை. |
( 127 ) |
|
1258. | விண்மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர் மண்மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் புண்மிசை யெஃகம்புக் கொளிப்ப போன்மனத் துண்மிசை யொழிபடை யாகி யூன்றவே. |
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். |
|
|
(பாடம்) பேரளவில். 2 சொரிந்த. |