பக்கம் : 792
 

     (இ - ள்.) விண்மிசை சென்றவர் மெலிவும் - வரைமேல வாய இரதநூபுரத்தின்
மேற்சென்ற மன்னர்கள் தோற்றதையும், வேற்றவர் மண்மிசை சென்றவர் மறிந்த மாற்றமும்
- பகைவர்களுடைய சுரமை நாட்டின்மேற் சென்ற மன்னர்கள் புறமிட்ட செய்தியும்,
புண்மிசை எஃகம் புக்கு ஒளிப்பபோல் - பழைய புண்ணின்கண் வேற்படை புகுந்து
ஒளித்தாற் போன்று, மனத்துண் மிசை ஒழி படை ஆகி ஊன்ற - நெஞ்சினுள்ளே புகுந்து
அதனை மேன்மேலும் அழிக்கும் கருவிகளாகித் தைக்க, (எ - று.)

ஒழிபடை : வினைத்தொகை. ஒழித்தல் - அழித்தல்.

திவிட்டன் படையோடே எதிர்த்தோரும், அருக்கனுக்கு ஆற்றாது உடைந்தனர் என்று
தூதன் கூறியபோதே, இதரநூபுரத்தும் நமர் உடைந்தனர் என்று ஒரு தூதன் வந்து
உணர்த்தினான்; அச்சுவகண்டன் புண்மிசை வேல்புக்காற் போன்று, மனம் உளைந்தான்
என்க.
 

( 128 )

அச்சுவக்கிரீவன் மேற்செலவு

1259. இருந்தினி யென்னையிங் கெழுக வென்றுபோய்ப்
பெருந்தகை யருங்கலப் பெயர்கொள் குன்றின்மேற்
பரந்தன படையொடு பாடி 1விட்டனன்
கருந்திரண் முகில்புரை காள மேனியான்.
 
     (இ - ள்.) ஈங்கு இனி இருந்து என்னை - இவ்விடத்தே யாம் இனி வாளா
விருத்தலால் பயன் யாது, எழுக என்று போய் - எல்லீரும் எழுங்கோள் என்று
கூறிப்போய், பெருந்தகை அருங்கலப் பெயர்கொள் குன்றின்மேல் - மிக்க பெருமையுடைய
அருங்கலம் என்னும் பெயர் கொண்டதொரு மலையின் மேலே, பரந்தன படையொடு பாடி
விட்டனன் - விரிந்த படையுடனே பாடி வீடமைத்துத் தங்கினான், கருந்திரள் முகில்புரை
காள மேனியான் - கரியதாய்த் திரண்டுள்ள மேகத்தை ஒத்த கருமை நிறமுடைய
அச்சுவகண்டன், (எ - று.)

இனி இங்கிருத்தலாற் பயனின்று; என் படை எழுக! என்று படையோடே போந்து,
‘அருங்கலம்’ என்னும் மலையிலே, அச்சுவகண்டன் இறங்கினன் என்க.
இம்மலை சீபுராணத்துள் ‘இரதாவர்த்தம்’ என்று கூறப்பட்டுளது.
 

( 129 )

அச்சுவகண்டன் தம்பிமார் போர்க் கெழுதல்

1260. அச்சுவக் கிரீவனுக் கிளைய 2ராயினோர்
கச்சையங் கருங்களி யானை வல்லவர்
    
 

     (பாடம்) 1 விட்டவே. 2காளையர்.