பக்கம் : 793 | | | | விச்சையர் கடற்படை பரப்பி 1விண்மிசை நச்செரி யுமிழ்தரு நகையர் தோன்றினார். | (இ - ள்.) அச்சுவக் கிரீவனுக்கு இளையர் ஆயினார் - அச்சுவகண்டனுக்குத் தம்பியார் ஆகியோரும், கச்சை அங் கருங்களி யானை வல்லவர் - கட்டுங் கயிற்றையுடைய அழகிய கரிய யானைமேற்கொண்டு போர் ஆற்றுதலில் வல்லுநரும் விச்சையர் - பல்வேறு மாயப்போர் வல்லுநரும் ஆகிய இளைஞர்கள், கடற்படை பரப்பி - கடல்போன்ற தம் பெரும் படைகளை விரியக் கொண்டு, விண்மிசை நச்சு எரி உமிழ்தரும் நகையர் தோன்றினர் - விசும்பிடத்தே நஞ்சுத் தீயைக் காலும் சினச் சிரிப்புடையராய் வந்து தோன்றாநின்றனர், (எ - று.) விச்சையர் கடற்படை - விச்சாதரர் கடல்போன்ற படை எனலும் ஒன்று. அப்போது அச்சுவகண்டன் தம்பியரும், யானைப்போர் வல்லுநரும், ஆகிய வீரர்கள் தம் கடற்படை பரப்பி, சின நகையுடையராய் வந்து தோன்றினர் என்க. | ( 130 ) | நீலரதன் சூண்மொழி | 1261. | இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக் குளைவன செய்தவ ருயிரை மற்றவர் கிளையொடுங் கீண்டர சாடு மன்றெனில் வளையொடுந் தலைமுடித் திருந்து வாழ்துமே. | (இ - ள்.) இளையருள் பெரியவன் சொல்லும் - அவ்வாறு தோன்றிய அச்சுவகண்டன் தம்பிமாருள்ளே மூத்தவன் சொல்வான், எம் இறை உளைவன செய்தவர் உயிரை - எம்முடைய தலைவன் வருந்தற்கு ஏதுவாய செயல்களைச் செய்த நம் பகைவர்களுடைய உயிரை, மற்றவர் கிளையொடும் கீண்டு - அவர்தம் கேளிரோடே அழித்து, அரசு ஆடும் - அரசினை ஆள்வேம், அன்றெனில் - அவ்வாறு அழித்திலேமெனில், வளையொடு தலை முடித்து இருந்து வாழ்தும் - மகளிர்போல வளையல் அணிந்து தலைமயிரை ஐம்பாலாய் வகுத்து முடிந்துகொண்டு இல்லினுள்ளேயே இருந்து வாழ்வேமாக, (எ - று.) மணிகண்டன், எம் இறைவனை உளையுமாறு செய்த நம் பகைவரைக் கொல்வேம் ; இன்றெனில் மகளிர் போன்று வளையணிந்து தலை முடித்து வாழ்வேம், என்றான் என்க. | ( 131 ) |
| (பாடம்) 1விண்மிசை. | | |
|
|