வயிரக்கண்டன் அந்தோ! மானிடர் இதுகாறும் மகளிரோடே ‘கண்டு கேட்டுண்டுயிர்த்துற்று“ இனிதாக வாழ்ந்தனரே! இப்போது, நம் கணையோடே களத்திலே உருளப் போகும் காலம் அவர்க்கு வந்துவிட்டதே என்றான் என்க. |
( 133 ) |
சுகண்டன் மறவுரை |
1264. | ஒத்திலங் கொண்சிறை யுவணன் றன்னொடு பைத்திலங் கரவுகள் 1பகைப்ப போன்மெனக் கைத்தலங் கையொடு புடைத்து நக்கனன் தொத்திலங் கலங்கலான் சுகண்ட னென்பவே. |
(இ - ள்.) தொத்து இலங்கு அலங்கலான் சுகண்டன் - பூங்கொத்துகள் திகழும் மலர்மாலை அணிந்த மற்றொரு தம்பியாகிய சுகண்டன் என்பான், ஒத்து இலங்கு ஓண்சிறை உவணன் தன்னொடு - வரிசையின் ஒத்துத் திகழ்தலையுடைய ஒளிபொருந்திய சிறகமைந்த கருடனுடனே, பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என - படமெடுத்துத் திகழும் பாம்புகள் அஞ்சாதே பகைத்தல் போலும் இம்மானிடப் பேதைகள் நம்மைப் பகைத்தல் என்று கூறி, கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் - கையோடு கைதட்டிச் சிரித்தான், (எ - று.) போன்ம் - பொலும். சுகண்டன், கருடனோடே பாம்புகள் பகைப்பது போல, பேதை மானிடர் நம்மொடு பகைத்தனர் என்று சொல்லிச் சிரித்தான் என்க. |
( 134 ) |
தம்பியரின் மறவுரை கேட்டு அச்சுவகண்டன் மகிழ்தல் |
1265. | தம்பியர் மொழியெனுந் தயங்கு மாரியால் வெம்பிய கொடுமனங் குளிர்ந்து வெய்யவன் நம்பெயர் முனிந்தவர் 2நயந்த மண்மிசை நும்பெயர் நிறுத்துமி னென்று நோக்கினான். |
(இ - ள்.) வெய்யவன் - கொடியவனாகிய அச்சுவகண்டன், தம்பியர் மொழியெனும் தயங்கும் மாரியால் - தன் தம்பிமாருடைய சொற்கள் என்னும் விளக்கமுடைய மழை பெய்தலாலே, வெம்பிய கொடுமனம் குளிர்ந்து - முன்னர் வெப்பமுடைத்தாயிருந்த கொடிய நெஞ்சு குளிரப்பெற்று, நம்பெயர் முனிந்தவர் நயந்த மண்மிசை - நமது பெயரையே வெறுத்தவராகிய சடியரசன் முதலியோர் விரும்புதற்குக் காரணமான பூமியின் மேலே, நும் பெயர் நிறுத்துமின் என்று நோக்கினான் - நுங்களுடைய புகழை நிலைநிற்கச் செய்யுங்கோள் என்று விரும்பி நோக்கலானான், (எ - று.) |
|
|
(பாடம்) 1 பதைப்ப. 2நயந்து. |