பக்கம் : 798 | | நால்வகைப் படையுள் தனித்தனி ஒவ்வொரு படையைக் கண்டோர், தாம் கண்ட படையே ஏனையவற்றினும் பெரிதென்னும்படி இருந்தன அப்படை என்க. | ( 139 ) | | 1270. | கைவலப் படையினர் கழலர் கச்சையர் செவ்வலர்க் கண்ணியர் செங்க 1ணாடவ ரிவ்வுல கிவர்க்கிட மில்லை முன்னிவர் ரெவ்வுல குடையவ ரென்னத் தோன்றினார். | (இ - ள்) கைவலப் படையினர் - கையிடத்தே வலிய போர்க் கருவிகளையுடையாரும், கழலர் - வீரக்கழல் யாத்தவரும், கச்சையர் - கச்சைகட்டியவரும், செவ்வலர்க் கண்ணியர் - செவ்விய மலரானாய முடிமாலையை அணிந்தவரும், செங்கண் ஆடவர் - சிவந்த கண்களையுடைய ஆடவரும் ஆகிய, இவர்க்கு - இம்மறவர்க்கு, இவ்வுலகு - இப்பேருலகம், இடமில்லை - இடம் போதாதாயிற்று, முன் - இதற்கு முன்பெல்லாம், இவர் - இம்மறவர்கள், எவ்வுலகுடையவர் என்னத் தோன்றினர் - எவ்வெவ்வுலகங்களை வாழிடமாக உடையரோ அறியோம் என்னும்படி காணப்பட்டனர், (எ - று.) செவ்வலர் - சிவந்த மலர் : செவ்விதின் அலர்ந்த தும்பைமலர் எனினுமாம். அப்படையிலுள்ள மறவர் நிற்றற்கும் இவ்வுலகம் போதாதாயிற்று; ஆயின், இதற்கு முன்னர் இவர் எவ்வெவ் வுலகிடை வாழ்ந்தனரோ! என்று எண்ணும்படி போர்மறவர் மிகுத்துத் தோன்றினர், என்க. | ( 140 ) | | 1271. | அன்றுபோர் மலைந்தது தானை யாயிடைச் சென்றுபோர் படுமிடந் திசைக ளின்மையா னின்றுபோ ராடவர் நேரொப் பார்களோ டொன்றுபோ ருலகினை யூழி யொத்ததே. | (இ - ள்) அன்று போர் மலைந்தது தானை - அற்றை நாள் போர்த் தொழில் ஆற்றியது படை, ஆயிடை - அப்பொழுது, திசைகள் சென்று போர்படும் இடம் இன்மையால் - திக்குகள் அப்படை பரவி நின்று போர் ஆற்றற்குப் போதிய இடமுடையவல்லவாயின ஆதலால், நின்று போர் ஆடவர் நேர் ஒப்பார்களோடு ஒன்றுபோர் - உறுதியுடன் நின்று, போர் மறவர்கள் தம்மொடு ஆற்றலாற் சமமாகி ஒத்த பகைவரோடே பொருதும் போர், உலகினை ஊழி ஒத்தது - உலகினை விழுங்கி அழித்தலைச் செய்கின்ற ஊழிக்காலத்தை ஒத்திருந்தது, (எ - று.) அப்போர் மறவர் உலகம் இடமில்லையாம்படி பரவியதனால், அழித்தலைச் செய்யும் போர் ஊழியை ஒத்தது என்க. | ( 141 ) | | 1272. | பேரினும் பெருகிய சின்னந் தன்னினுந் தாரினு மாறுமா றெறிந்து தம்முளே தேரினுந் தேரினுந் திளைக்கின் றார்சிலர் காரினும் பெரிதவர் கணைபெய் மாரியே. | (இ - ள்.) பேரினும் - புகழின்மேலும்,பெருகிய சின்னந் தன்னிலும் - மிக்க அடையாளங்களின் மேலும், தாரினும் - மாலைகளின் மேலும், மாறுமாறு எறிந்து - எதிர் எதிர் படைகளை வீசி, தம்முளே - தங்களுக்குள்ளே, தேரினும் தேரினும் திளைக்கின்றார் சிலர் - தேர்களைத் தேர்களின் எதிர் நிறுத்திப் போர் செய்வர் சில தேர் மறவர், அவர் பெய் கணைமாரி - அம்மறவர்கள் பொழிகின்ற கணைமழை, காரினும் பெரிது - முகில் பெய் மழையினும் மிக்கது, (எ - று.) | |
| (பாடம்) 1 ணாடையர். | | |
|
|