பக்கம் : 799 | | பேர் - அதுகாறும் பெற்ற மறப்புகழ், அதன்மேல் படை எறிந்தென்றது அப்புகழ் இறக்கும்படி எறிந்து என்றவாறு. போரில் தோற்றவர்க்குப் புகழும், சின்னங்களும், வாகைமாலையும், ஒருங்கழிதலால் அவற்றை எறிந்து என்றார். சின்னம் - மறவர்களுக்கு அவர்தம் மறச்சிறப்புக் குறித்து மன்னர்கள் வழங்கும் அடையாளமாகிய பொற்பூ, வாள் முதலியன. | ( 142 ) | | 1273. | தாளிடை மிடைந்தன தாள்க டம்முளே தோளிடை மிடைந்தன தோள்க டோளிடை வாளிடை மிடைந்தன வாள்கண் மற்றிவை நாளிடைப் படுங்கொலோ நாங்கள் சொல்லினே. | (இ - ள்.) தாளிடை தாள்கள் மிடைந்தன - கால்களுடே கால்கள் பின்னின, தோளிடை தோள்கள் தம்முளே மிடைந்தன - தோள்களோடு தோள்கள் தமக்குள் நெருங்கின, தோளிடை வாள்கள் வாளிடைமிடைந்தன - கைகளிடத்தேயுள்ள வாள்கள் வாள்களோடு நெருங்கின, மற்றிவை - இன்னோரன்ன போர் நிகழ்ச்சிகளை, நாங்கள் சொல்லினே - எஞ்சாது யாம் சொல்லத் தொடங்கினால், நாள் இடைப்படும் - எம்மாயுள் நாள் இடையிலே கழிவனவாம், கொல், ஓ : அசைகள், (எ - று.) இதைக் கூறுதற்கு எம்மாயுள் போதாது என்றவாறு, கால்களோடே கால்கள் பின்னின; தோள்களோடே தோள்கள் மிடைந்தன வாளோடு வாள் நெருங்கின; சின்னாட் சில்பிணிமானிடனாகிய யான் அதனைச் சொல்லமுடியாது என்றார் என்க. | ( 143 ) | | 1274. | குடைநில மறைப்பவுங் கொடிக1ள் போர்ப்பவு மிடைநில மிருண்மெழுக் கிட்ட தாயிடைப் படைநில விலங்கவும் 2பணிகண் மின்னவு மிடைநில மிடையிடை யிலங்கித் தோன்றுமே. | | |
| (பாடம்) 1 விட்டவே. 2காளையர். | | |
|
|