பக்கம் : 800
 

     (இ - ள்.) குடைநில மறைப்பவும் - குடைகள் நிலத்தை மறைத்தலாலும், கொடிகள்
போர்ப்பவும் - கொடிகள் மறைத்தலாலும், இடைநிலம் இருண்மெழுக்கிட்டது -
அக்களத்தின் ஊடே இடையிட்ட நிலம் இருளால் மெழுகப்பட்டாற் போன்றிருண்டது; படை
நிலவு இலங்கவும் - போர்க்கருவிகளின் ஒளி திகழ்தலாலும், பணிகள் மின்னவும் -
அணிகலன்கள் மின்னுவதாலும், இடைநிலம் இடை இடை இலங்கித் தோன்றுமே -
அப்போர்க்களத்திடையே சிற்சில இடம் ஒளியாற்றிகழும்.

குடை முதலியவற்றால் அப்போர்க்களத்தே இருள் உண்டாயிற்று; போர்க்கருவி
முதலியவற்றால் ஒளியுமுடையதாயிற்று என்க.
 

( 144 )

 

1275. கருப்புடைக் 3கைகளாற் புடைத்துக் கண்களு
ணெருப்பொடு நெருப்பெதி ரெறிப்ப யானைகண்
மருப்பொடு மருப்பிடை மிடைந்து மான்றரோ
பொருப்பொடு பொருப்பவை பொருவ போன்றவே.
 
     (இ - ள்.) கருப்புடைக் கைகளாற் புடைத்து - கரியநிறமுடைய தம் துதிக்கைகளாலே
தாக்கி, கண்களுள் நெருப்பொடு நெருப்பு எதிர் எறிப்ப - தம் கண்களுள் சினத்தீப் பற்றி
ஒன்றற்கொன்று எதிராக வீச, யானைகள் - போர்க்களிறுகள், மருப்பொடு மருப்பு
இடைமிடைந்து - தம் கோடுகளோடு கோடுகள் செறிந்து, மான்று - மயங்கி, பொருப்பொடு
பொருப்பு அவை - மலைகளோடு மலைகள், பொருவ போன்றவே - போர் ஆற்றுதலை
ஒத்தன,
(எ - று.)

பொருப்பவை - அவை: பகுதிப் பொருளது. யானைகள் தம் கரிய கைகளாற் புடைத்தும்
மருப்புகளாலே குத்தியும் மலையோடுமலை பொருதாற்போற் பொருதன என்க.
 

( 145 )

 

1276. கறங்கெனக் காலசக் கரங்க டாமென
மறங்கிளர் மன்னர்தம் மகுட நெற்றியு
    
 

     (பாடம்)1 ளோப்பவும். 2 மணிகண். 3 கையளாற்.