பக்கம் : 801 | | | | முறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த் திறங்கிளர் புரவிக டிரிதர் கின்றவே. | (இ - ள்.) கறங்கென - காற்றாடிகளைப் போன்றும், கால சக்கரம்தாம் என - காலமாகிய சக்கரத்தைப் போன்றும், மறங்கிளர் மன்னர்தம் மகுடநெற்றியும் - மறத்தன்மைமிக்க அரசர்களுடைய முடியணிந்த தலையின் மேலும், கடாக்களிற்று உச்சி மேலும் - ஆண் யானைகளின் மத்தகத்தின் மேலும், திறங்கிளர் புரவிகள் - ஆற்றல் சான்ற குதிரைகள், திரிதர்கின்றவே - திரிவனவாயின, (எ - று.) காலசக்கரம் - இடையறாது இரவும் பகலுமாய் மாறிமாறிச் சுழலும் காலவட்டம். மறலியின் சக்கரமுமாம். குதிரைகள் காற்றாடிபோன்றும், காலசக்கரம் போன்றும், அரசர் முடிமேலும், யானைகளின் உச்சிமீதும் சுழன்று திரிந்தன என்க. | ( 146 ) | | 1277. | செம்பியல் கிடுகின செம்பொற் றட்டின வம்புபெய் தூணிய வரவத் தேர்க்குழாம் வெம்பிய கணைமழை விரவி வில்லொடு வம்புபெய் மழைமுகில் பொருவ போன்றவே. | (இ - ள்.) செம்புஇயல் கிடுகின - செம்பினால் இயன்ற கிடுகுடையனவும், செம்பொன் தட்டின - செம்பொன்னாலியன்ற தட்டினை உடையனவும், அம்புபெய்தூணிய - அம்புகள் செறிக்கப்பட்ட தூணிகளை உடையனவும், அரவத்தேர்க்குழாம் - முழங்குவனவுமாகிய தேர்க்கூட்டங்கள், வெம்பிய கணைமழை விரவிவில்லொடு - வெம்புதற்குக் காரணமான கணைமாரியோடுகூடி வில்லோடும், வம்பு பெய் மழைமுகில் புதுமையாகப் பொழிதலையுடைய மழைமேகம், பொருவ போன்றவே - போர்புரிவனவற்றை ஒத்தன, (எ- று.) செம்பாலாய கிடுகுகளையும் செம்பொன்னாலாய தட்டினையும், அம்புக் கூட்டினையும் உடைய தேர்க்கூட்டம் தம்பாலிருந்து கொடிய கணைமாரி பொழிதலால் முகில் வில்லோடு தோன்றிப் போர்புரிவதை ஒத்தன என்க. | ( 147 ) | | 1278. | இன்னவ ரின்னுழி யின்ன செய்பவென் றென்னவ ரறிவுமங் கிடைபு காவகை மின்னவி ரெஃகினு மிடைந்த வாளினு மன்னவர் செருத்தொழின் மயங்கி யிட்டவே. | | |
|
|