பக்கம் : 803 | | (இ - ள்.) ஏற்றவர் - தம்மோடு போர் ஆற்றுதற்கு எதிர்ந்தவர், இமைப்பினும் - தம் கண்களை இமைத்துவிட்டாலும், இகழ்ந்து -ஆண்மையற்றவர் என அவரை இளிவரப் பேசி, எறிதல் செய்யார் - அவரொடு படைகளை வீசிப் போர் ஆற்றாதொழிவாராய், தோற்றவர் - தம்மொடு போர்செய்து தோல்வியுற்றவர், புறக்கொடையும் நாணி - புறங்கொடுத்து ஓடுதற்குத் தாமே நாணி; மிக நோக்கார் - அவர்பாற் போரின் மிக்குச் சேறலையும் விரும்பாதவராய், வேற்றவரை - தம் பகைவர்களை, இது வீரநெறி காண்மின் என்று - எமது ஒழுக்கமாகிய இது, மறவர்க்குரிய அறநெறியாம் என்று அறியுங்கோள் என்று, தேற்றுவனர்போல் - தம் செயலாலேயே தெளிவிப்பார் போன்று, அவுணர் சென்று திரிகின்றார் - சில விச்சாதரர் சென்று போர்க்களத்தே சுற்றித்திரிவர், (எ - று.) “விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு“ (குறள் - 775) என்பவாகலின் கண்ணிமைத்தாரையும் புறங்கொடுத்தாராகக் கருதி அவர்மேற் படைவிடாராயினார் என்க. இன்னராகலின் தோற்றோடுபவர்க்குத் தாமே பெரிதும் நாணுவாராயினர். மிக நோக்கல் - அவர் மேற் போர்த்தொடுத்தலைக் கருதுதல். அவுணர் - விச்சாதரர். அவுணர் தானவர் என்பன விச்சாதாரரைக் குறிப்பனவாகச் சைன நூல்களுட் காணப்படுகின்றன. | ( 150 ) | | 1281. | தாருடைய 1மார்பினிடை 2சார்கணை குளிப்ப வேரொடு 3பறித்தன ரெழுத்துவரி நோக்கிப் பேரொடு4று பீடுடைய னாரென வினாவி நேர்படுது மென்றுசிலர் 5நேடுபு திரிந்தார். | (இ - ள்.) தார்உடைய மார்பினிடை - மலர்மாலை யணிந்த தம் மார்பின் கண்ணே, சார்கணை குளிப்ப - யாண்டிருந்தோ வந்தெய்திய அம்பு பாய்ந்து ஊடுருவிற்றாக, வேரொடு பறித்தனர் - அவ்வம்பை முற்றும் தம் கையாற் பறித்து, எழுத்து வரி நோக்கி - அவ்வம்பிற் பொறித்துள்ள எழுத்தாலாய முகவரியைப் படித்து, பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி - போர் ஆற்றுதலிலே பொருந்திப் பெருமைமிக்க இப்பேருடையன் யாவன் என்று அயனின்றாரை வினவி, நேர்படுதும் - அம்மெய்ம் மறவனோடு யாம் போர் ஆற்றுதும், என்று - என்று கருதி, சிலர் நேடுபு திரிந்தார் - சில மறவர்கள் அப்பெயருடையாரைத் தேடித் திரிவாராயினர், (எ - று.) | |
| (பாடம்) 1 மார்புபக. 2 வார்கணை. 3 பரிந்தன. 4 நன்காளையவனா ரென. 5 நாடுபு. | | |
|
|