பக்கம் : 804 | | முகவரி - அவ்வம்புக்குரியான் பெயர் இடம் முதலிய குறித்தெழுதப்பட்ட வரிகள். தம் கண்முன் னில்லாமலே தம்மார்பிற் கணை பாய்ச்சிய மறவனைப் புகழ்வார் பேரொடு உறு பீடுடையன் என்றார். அம்பின்கண் அதற்குரிய மறவன் பெயர் பொறிக்கப்படுதல் மரபு. இதனை இராமாயணத்தும் வாலியின் மார்பில் ஏவிய இராமனுடைய அம்பை வாலி பறித்து அதன்கட் பொறிக்கப்பட்டுள்ள பெயரால் இஃது இராமன் அம்பு என்றறிந்தான் என்னும் பகுதியானும் உணர்க. | ( 151 ) | அரிசேனன் போர் மேற்கோடல் | 1282. | கேடக மிடத்தது 1வலக்கைகிள ரொள்வா ளாடக மடுத்தவணி பூணனலர் தாரான் றோடக மடுத்த2துதை கண்ணியொடு துன்னா ரூடக மடுத்தொருவ னுந்திநனி வந்தான். | (இ - ள்.) ஒருவன் - ஒரு சிறந்த போர் மறவன், இடத்தது கேடகம் - தன் இடக்கையின்கண் கிடுகுபற்றியவனாய், வலக்கை - தன் வலக்கையில், கிளர் ஒள்வாள் - மன எழுச்சிக்குக் காரணமான ஒளிமிக்க வாட்படையுடையனாய், ஆடகம் அடுத்தஅணி பூணன் - பொன்னாலியன்ற அழகிய அணிகலன்களையும், அலர் தாரான் - மலர்மாலையையும் அணிந்தவனாய், தோடு அகமடுத்ததுதை கண்ணியொடு - இதழ்களால் செறிவுடைய முடிமாலையைச் சூடியவனாய், துன்னார் ஊடுஅகம் அடுத்து - பகைவருடைய அணியினூடே புகுந்து, உந்தி - அவர்களை வெருண்டடோடச் செய்து, நனி வந்தான் - விரைந்து போர் ஆற்றியபடியே வருவானாயினன், (எ - று.) ஒருவன் என்றது அரிசேனனை. ஒருகையில் கிடுகுபற்றி ஒரு கையில் வாள்கொண்டு அணிகலன்களையும் மாலையையுமுடைய ஒரு மறவன் தமியனாய்ப் பெரும்படையை ஊடறுத்துப் போராற்றி வந்தான் என்க. | ( 152 ) | அரிசேனன் போர்க்கு வருதல் | 1283. | வெறிமின் விரிகின்ற விறலாழி யிறைதோழ னறிமின் 3பெயர்யானவ் வரிசேன னெனநின்றே னெறிமினெதி ரென்னொ டிகல்வல்லி 4ருளராயின் மறிமி னதுவன்றி யுயிர்வாழ லுறினென்றான். | | |
| (பாடம்)1 வலத்ததயிலொள்வாள். 2 தொகைக். 3பொய்யானவ். 4உளிராயின். | | |
|
|