பக்கம் : 810 | | கொல்லுலைக் களத்தே சிதறும் தீப்பொறிகளைப் போன்றும், காற்றால் சிதறப்படும் வேங்கைமலர் போன்றும், அவ்வாட்படைகள் தாக்கும்போது தீப்பொறி சிதறின என்க. | ( 162 ) | | 1293. | ஆளடு மடற்றகைய னாயவரி சேனன் றோளொடு 1துதைந்தெறியும் வாளதனை நோக்கிக் கோளொடு மடுத்தகுளிர் மாமதிய மேய்ப்ப வாளொடு மடுத்துமணி கேடக மறைத்தான். | (இ - ள்.) ஆள் அடும் அடல் தகையன் ஆய - மறவர்களைக் கொன்று குவிக்கும் வலிமையுடைய மறத்தகுதியுடையவனான, அரிசேனன் - அரிசேனன் என்பான், தோளொடு துதைந்து எறியும் வாளதனை நோக்கி - தனது தோளிற்பட வீசுகின்ற வாளை வியாக்கிரரதன் கண்டு, கோளொடு மடுத்த - கேதுவினால் பற்றப்பட்ட, குளிர் மாமதியம் ஏய்ப்ப - குளிர்ந்த முழு வெண்டிங்கள் போன்று தோன்றும்படி, வாளொடு மடுத்து - அவ்வாட்படையோடு சேர்த்து, மணி கேடகம் மறைத்தான் - தனது அழகிய கிடுகுப்படையால் மறைத்தொழித்தான், (எ - று.) அரிசேனன் வீசிய ஒளியுடைய வாள் கேது என்னும் பாம்புபோலவும் அதனைத் தடுத்த வியாக்கிரரதன் கேடகம் திங்கள் போலவும் தோன்றுதலால் பாம்பாற் பிடிக்கப்பட்ட திங்களை உவமித்தார் என்க. | ( 163 ) | வியாக்கிரரதன் அரிசேனனை வதைத்தல் | 1294. | ஆங்குமுன் னெறிந்துபெயர் கின்றவரி சேனன் பூங்கம ழலங்கலுடை மார்பமிரு போழாய் நீங்கவெறிந் தானெடிய மாற்கிளைய காளை யோங்கிய விசும்பினவர் 2கண்டன ரொளித்தார். | (இ - ள்.) ஆங்கு - அவ்வாறு, எறிந்து பெயர்கின்ற - வாளால் எறிந்து செல்கின்றவனாகிய, அரிசேனன் - அரிசேனனை, பூங்கமழ் அலங்கலுடை மார்பம் - அழகிய மணங்கமழும் மாலையணிந்த மார்பு, இருபோழாய் நீங்க - இரண்டு பிளவுகளாய்ப் பிளக்கும்படி, நெடியமாற்கு இளையகாளை - திவிட்டனுக்குத் தம்பி முறைமையனாகிய வியாக்கிரரதன், எறிந்தான் - வாளால் எறியலானான், ஓங்கிய விசும்பினவர் கண்டனர் - உயர்ந்த வானின்கண் நின்ற அமரர்கள் இம்மறச் செயலைக் கண்டு, ஒளித்தார் - அஞ்சி ஓடி மறையலாயினர், (எ - று.) | |
| (பாடம்) 1 வடுத்தெறியும். 2கொண்டன. | | |
|
|