பக்கம் : 812 | | | | பரிசேரணி யுயர்1 தேர்பல மதயானையு மெறியாத் திரிசாரிகை 2நிகராயெவர் திறலாரென வினவும். | இச்செய்யுள் தொடங்கி (1295 - 1306) பன்னிரண்டு செய்யுள்கள் சில ஏட்டுப்படியில் காணப்படவில்லை என்ப.) (இ - ள்) அரிசேனன் அங்கு அழிவு ஆதல் கண்டு - அரிசேனன் அப்போர்க்களத்தே மாண்டமை கண்டு, அயில் வாள் ஒளி மிளிரா - கூரிய வாள் ஒளிபரப்பா நிற்பவும், விரிசீர் வட்டமிடு கேடகம் - விரிந்து சிறந்த வட்டவடிவத்தால் அழகு மிக்க கிடுகு, சுழலா - சுழலா நிற்பவும், நகு வருவான் - மறநகை கொண்டு வருகின்றவனாகிய குணசேனன் என்பான், அணிசேர் பரி - அணிகளாக வகுக்கப்பட்ட புரவிகளையும், உயர்தேர் -உயரிய தேர்களையும், பல மதயானையும் - பலவாகிய மதம் பொழிகின்ற யானைகளையும், எறியா - அழித்து, சாரிகை திரி - வட்டமாய்ச் சுழன்று, எவர் - ஈண்டுள்ளாரின் யாரேதான், நிகராய்த் திறலார் - என்னோடு சமனாய்த் திறலுடையார், என வினவும் - என்று வினவினான், (எ - று.) அரிசேனன் இறந்தவுடன் குணசேனன் என்பான் வாளை வீசிக்கொண்டும் கேடகத்தைச் சுழற்றிக்கொண்டும் தேர் யானை முதலியவற்றை அழித்துக்கொண்டும் சாரிகைசுற்றி இக்களத்தே உள்ளாரில் யாரே எனக்கு நிகராய்ப்போர் புரிவாருளர் என்று வினாயினன் என்க. | ( 166 ) | | 1297. | சிகரிம்முடி 3திருமாமணி செறிகுண்டல மிலங்கத் 4திகிரிப்படை யரசன்றிறல் சிறக்கவெனப் புகழ்ந்து பகருந்நல குணசேனனும் பருவம்முகி லிடிபோற் புகரும்மத களிறென்னவும் 5புலியென்னவுந் திரிவான். | (இ - ள்.) சிகரிமுடி - மலைச்சிகரத்தை ஒத்த தன்முடியணியின்கண் அழுத்தப்பட்ட, திருமாமணி - சூளாமணி வடமும், செறிகுண்டலம் - செவியிலே செறிக்கப்பட்ட குண்டலங்களும், இலங்க - திகழ, திகிரிப்படை அரசன் திறல் சிறக்க - அச்சுவகண்ட மன்னற்கு ஆற்றல் சிறந்திடுக, எனப் புகழ்ந்து - என்று வாழ்த்திப் புகழ்ந்து, பகரும் நலகுண சேனனும் - புகழப்படுகின்ற நல்ல குணசேனன் என்னும் அம்மறவனும், பருவம் முகில் இடிபோல் - பருவம் அமைந்த முகில் இடித்தாற் போன்று முழங்கி, புகர் - முகப்பொறியுடைய, களிறு என்னவும் - ஆண்யானை போன்றும், புலி என்னவும் - புலியைப் போன்றும், திரிவான் - அப்போர்க்களத்தே யாண்டும் திரிவானாயினன், (எ - று.) |
| (பாடம்) 1 தேர் மிகுபல யானையும், தேர் மத பலயானை. 2நிகரானவருளரோ. 3திருமாறணி. 4திகிரிப்புடை. 5புலியும்மெத். | | |
|
|