பக்கம் : 814
 

 

1300. வந்த வன்பெய
ரிந்தி ரன்னெனுங்
கந்து கொல்களி
றுந்து காமனே.
 
     (இ - ள்.) வந்தவன் பெயர் - அவ்வாறு வந்த வீரன் பெயர் யாதெனில், கந்துகொல்
களிறு உந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும்,
இந்திரன் எனும் காமனே - இந்திரன் என்று சொல்லப்படும் காமன் என்பான் (எனவே
இந்திரகாமன், என்றபடி,)
(எ - று.)

     கட்டுத்தறியை முறிக்கின்ற ஐராவதம் என்னும் யானையைச் செலுத்தும் இந்திரன்
பெயரோடு காமன் என்னும் பெயரும் இணைந்த இந்திரகாமன் என்றபடி.
 

( 170 )

இந்திரகாமனும் குணசேனனும் போர் ஆற்றுதல்

1301. இருவ ரும்மெதிர்
பொருதும் வேலையி
னருகு 1நின்றவர்
வெருவி 2யோடினார்.
 
     (இ - ள்.) இருவரும் எதிர்பொருதும் வேலையின் - இருவரும் நேருக்கு நேராக
நின்று போர் செய்துகொண்டிருக்கிற சமயத்தில், அருகுநின்றவர் - இவர்களிருவருக்கும்
பக்கத்திலே நின்று கொண்டிருந்தவர்கள், வெருவி ஓடினார் - இவர்கள் செய்யும் கொடிய
போரைக்கண்டு அஞ்சி ஓடினார்கள், (எ - று.)

     இந்திரகாமனும், குணசேனனும் எதிர்ந்து போராற்றத் தொடங்கியவுடன், அப்போரின்
கொடுமை கண்டு அயனின்றா ரெல்லாம் அஞ்சி ஓட்டமெடுத்தனர், என்க.
 

( 171 )

இந்திரகாமன் குணசேனன் தோள் ஒன்றனைத் துணித்தல்

1302. வாளி னாலொரு
தோளை 3வீழ்த்தவோர்
தோளி 4னாலவன்
வாளை யிட்டனன்.
 
     (இ - ள்.) வாளினால் ஒரு தோளை வீழ்த்த இந்திரகாமன் தன் வாளாலே
குணசேனனுடைய ஒரு தோளை வெட்டித்தள்ள, ஓர் தோளினால் அவன் - எஞ்சிய ஒரு
கையாலே அக்குணசேனன், வாளை யிட்டனன் - இந்திரகாமன் தோளின்மேல் தன் வாளை
வீசினான், (எ - று.)
 

     (பாடம்) 1நின்றனர். 2யோடினர். 3வீழ்த்தொரு. 4னாலிவன்.