பக்கம் : 816
 

     திணை - பூமி, ஈண்டுப் போர்க்களம். குணசேனன் மாண்டவுடன் வரசேனன்
என்பான் களிப்பு மிக்கானாய்த் தோளானாய்ப் பிடித்துக்கொண்டு வருக என்று நின்றான்
என்று இயைத்துக் கொள்க.
 

( 174 )

வரசேனனைக் காமுகன் எதிர்தல்

1305. மற்றவ னிற்ப தோர்ந்து மதகளி றனைய காளை
கொற்றவ னருக்க கீர்த்தி குணம்புகழ்ந் தாடிப் பாடிக்
கற்றவன் கலைக ளெல்லாங் காமுக னென்னும் பேரான்
பற்றிய வில்லு மம்பும் பாங்குடன் 1பரித்து வந்தான்.
 
     (இ - ள்.) மற்றவன் நிற்பது ஓர்ந்து - இவ்வாறு அறைகூவி வரசேனன் நிற்றலை
அறிந்து, கலைகள் எல்லாம் கற்றவன் - போர்க்கலைகள் முழுதும் கற்ற பெரியோன்,
மதகளிறு அனைய காளை - மதநீர்மிக்க ஆண் யானையை ஒத்த இளைஞன், காமுகன்
என்னும் பேரான் - காமுகன் என்னும் பெயரை உடையோன் ஒருவன், கொற்றவன் அருக்க
கீர்த்தி - தன் மன்னனாகிய அருக்க கீர்த்தியின், குணம் புகழ்ந்து பாடிஆடி -
குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் கூத்தாடிக்கொண்டும், பற்றிய வில்லும் அம்பும்
பாங்குடன் பரித்து வந்தான் - பற்றப்பட்டவில்லையும் அம்பறாத் தூணியையும்
முறையோடே ஏந்தி அவ்வரசேனன் எதிரே வந்தான், (எ - று.)

வரசேனன் வருதலைக் கண்ட காமுகன் அருக்ககீர்த்தியின் புகழைப் பாடிக்கொண்டும் மறச்
செருக்கால் ஆடிக் கொண்டும் வந்து அவனை எதிர்த்தான் என்க.
 

( 175 )

 

1306. வில்லொரு கையி னேந்தி
     வெங்கணை குழைய வாங்கிச்
சொல்லரு மாரி போலத்
     தொடுத்தவன் விடுத்த லோடு
மல்லுறு காளை தன்மேல்
     வராமலே விலக்கி யிட்டுக்
கல்லெனக் கலங்கி வீழக்
     கைச்சிலை கணையே றிட்டான்.
    
 

     (பாடம்) 1 எதிர்த்த தன்றே.