பக்கம் : 818
 

அரிகேதனன் போர்க் கெழுதல்

1308. குடர்மாலைக டலைசூடின குழவித்தலை குழையாப்
படர்காதினுள் ளவைபெய்தன பகுவாயது குருதித்
தொடர்மாமழை மதயானைகை 1துணியாவவை யிடையே
சுடர்மாலைகள் விடுசூலமொ டொருவன்றிரி கின்றான்.
 
     (இ - ள்.) சுடர் மாலைகள் விடுசூலமொடு - ஒளிக்கற்றைகளை ஒழுங்குபட வீசுகின்ற
சூலப்படையோடே, ஒருவன் - ஆங்கு வந்த அவ்வித்தியாதரன், மதயானை கைதுணியா -
மதக்களிப்புடைய யானைகளின் கைகளை வெட்டியும், அவை - அவ்வியானைகள்,
குடர்மாலைகள் தலை சூடின - தம் குடராகிய மாலைகளைத் தம் தலைகளிலே
சூட்டிக்கொள்ளுமாறும், குழவித்தலை படர் காதினுள் - இளமை மிக்க தம்
தலைகளிலே பொருந்திய அகலியவாய செவிகளிலே, அவை குழையாப் பெய்தன -
அக்குடர்கள் குண்டலங்களாகப் பெய்யப் பெற்றனவா மாறும், பகுவாயது குருதித் தொடர்
மாமழை - தம் பெரிய வாயின்கண் அமையாத குருதி மழையைச் சொரிவன ஆமாறும்
செய்து, இடையே - அவ்வியானைப் படையினூடே, திரிகின்றான் - போர் ஆற்றித்
திரிவானாயினன், (எ - று.)

     அங்கு வந்த வித்தியாதரன் யானைகளின் கைகளைத் துணித்தும் யானைகளின்
குடர்களை அவற்றின்மேல் மாலைகள்போற் றோன்றும்படி சரித்தும் இவ்வாறு
சூலப்படையாலே போர்செய்து திரியா நின்றான் என்க.
 

( 178 )

அரிகேதனனின் ஆரவாரப் பேச்சு

1309.
கள்ளாவது குருதிப்புனல் கலனாவது கையே
நள்ளாதவ ருடலம்பிற கறியாவது நமக்கென்
றுள்ளாதவ ருளராங்கொலிவ் வுலகின்னென வுரையா
விள்ளாதவர் சிலர் பின்செல விரல்வீளைகள் விளியா.
 
     (இ - ள்.) நமக்கு - எனக்கு, கள் ஆவது குருதிப் புனல் - பருகும் கள் யாதெனில்
அது என் பகைவரின் குருதியே, கலன் ஆவது கையே - பருகற்குரிய கலம் யாதெனில்
அது என் கையே, பிற கறியாவது நள்ளாதவருடலம் - அக்கள்ளுடனே கறிக்கும் கறிகள்
யாவையெனில் அவை என் பகைவருடைய உடற்றசைகளே, என்று - என்று கூறிக்கொண்டு,
இவ்வுலகில் உள்ளாதவர் உளர் ஆம்கொல் - இவ்வுலகத்திலே என்னுடைய
மறத்தன்மையைக் கருதாத பகைவரும் உளரேயோ, என உரையா - என்று வினவுவானாய்,
விள்ளாதவர் - தன் நண்பர்கள், சிலர் - ஒருசிலர், பின்செல
 
 

     (பாடம்) 1308, 1309, இப்பாடல்கள் 2. 3. 4, ஏடுகளில் இல்லை.1துணிகை விரலிடையே.