பக்கம் : 819
 

     - தன் பின்னர்த் தொடர்ந்து வாரா நிற்ப, விரல் வீளைகள் விளியா - விரல்களை
வாயில் வைத்துச் சீழ்க்கையடித்துப் பகைவரை அறை கூவிக்கொண்டு, (எ - று.)

விளியா இவன் வருகின்றதோர் பொலிவே என்று 1311 ஆம் செய்யுளிற் சென்று முடியும்.

பகைவர்களின் குருதியே யான் குடிக்கும் கள், என் கைகளே அக்கள்ளைப் பருகுதற்குரிய
கலம், பகைவருடற் றசையே யான் அக்கள்ளுடன் றின்னும் கறியாம், என்னை
எண்ணாதவரும் வீரருள் உளரோ என்று தன் விரல்களால் சீழ்க்கையடித்து அழைத்து
என்க.
 

( 179 )

அரிகேதனன் போர்த்திறம்

1310. களியானையி னெயிறாயின பறியா1 வவை கறியா
அளியாதுபல் படையாளர்க ளடையார்களை யுடனே
ஒளி2வாளிடை யிடைவிட்டுட 3லுருவாவுயிர் பருகாத்
தெளியாதெதிர் வருவாரயி லுருவாவவை செறியா.
 
     (இ - ள்.) களியானையின் எயிறு ஆயின - மதக்களிப்புடைய யானையின் பற்களை,
பறியா அவை கறியா - பறித்து அவையிற்றைக் கடித்து, அளியாது - அருள் செய்யாது, பல்
படையாளர்கள் அடையார்களை - பல்வேறு படைகளையும் ஏந்திய தன் பகைவர்களை,
உடனே - அப்பொழுதே, உடல் உருவா - உடல்கள் ஊடுருவிப் போம்படி, ஒளிவாள்
இடையிடைவிட்டு - ஒளிமிக்க வாட்படையை ஊடேஊடே செருகி, உயிர் பருகா - அவர்
உயிரினைக் குடித்து, தெளியாது எதிர் வருவார் - தன்னை அறியாமல் தன் எதிரே வந்து
சிக்குபவர்களை, அயில் உருவா வகை - வேல் உருவிப்போம்படி, செறியா - செருகி, ( )

     யானைகளின் கோடுகளைப் பறித்துத் தின்றுகொண்டும் பகைவர்களின் உடலிலே
ஊடுருவிச் செல்லும்படி இடையிடையே வாளைச் செருகியும், என்க. இவ்வெச்சம் அடுத்த
செய்யுளில் முடியும்.
 

( 180 )

இதுவுமது

1311. எரிபோல்வன சுரிபங்கியொ 4டிருள்போலிருண் மெய்யோ
டரிபோலதி ரகல்வானுற நிமிராவடி 5புடையாப்
பரிபோல்வன பிடியாவுட லடியாவிடை 6படுதேர்
பொரிபோலெழ வுதையா7 விவன் வருகின்றதொர் பொலிவே.
    
 

     (பாடம்) 1 வகை. 2 வாயிடை. 3 லுருவாமுதல். 4டிருள்போல் கருமெய்யோ. 5யுடையாப். 6மறிதேர். 7விது.