பக்கம் : 82 | | “இறைவினை திரியாப் பழவினையாளரை வழிமுறை மரபில் தந்தொழின்முறைநிறீஇ“ என்றார் பெருங் கதையினும். (1. 32 : 83 - 4.) உழையவர் - அமைச்சர் முதலியோர்; ஈண்டுப்படைத் தலைவர் என்க. மரபினார் எனவே அந்தப்படை வீரர்களின் முன்னோரும் பயாபதி மன்னனுடைய தாதை மூதாதை முதலியோரிடத்தில் படைவீரராக இருந்தமை பெறப்பட்டது. வழிமுறை பயின்று வந்த மரபினாரைத் திருவள்ளுவர் “தொல் படை“ என்பர். “உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத், தொல்படைக் கல்லால் அரிது“ என்பது திருக்குறள். நாடோறும் வளர்தலையுடைய இரும்புத்தூண் ஒன்று உளதாயின் அதனைப்போன்ற தோள் என்பார், ‘எழுவளர்த் தனைய தோளார்‘ என்றார். இன்ன நீரார் என்றதனால், தொன்மை, அன்பு, ஆற்றல், அறை போகாமை, மானம் முதலியநல்லியல்புகளையும் குறித்தார். | ( 29 ) | புலவர்கள் வருதல் | 99. | காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில் நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய பூவலர் பொலிவு நோக்கிப் 1புலமயங் 2களிப்ப வாகிப் பாவல ரிசையிற் றோன்றப் 3பாடுபு பயின்ற வன்றே. | (இ - ள்.) காவலன் என்னும் செம்பொன் கற்பகம் - அரசன் என்கிற சிவந்த பொன்மயமான கற்பகமரம்; கவின்ற போழ்தில் - அழகுபெற்று விளங்கிய சமயத்தில்; நாவலர் என்னும் வண்டு - புலவர்கள் என்கின்ற வண்டுகள்; நகைமுகம் பெயரின் ஆய - மகிழ்ச்சியையுடைய அரசனது முகமென்கிற; பூ அலர் பொலிவு நோக்கி - மலரானது மலர்ந்துள்ள அழகைப் பார்த்து; புலமயம் களிப்ப ஆகி - தமது ஐம்புலன்களும் மகிழ்ச்சியை அடையுமாறு; பா அலர் இசையில் தோன்ற - பாடல்கள் விளங்குகின்ற இசையோடு அமைய; பாடுபு பயின்ற - பாடிக்கொண்டு பொருந்தின. அன்றே - அசை. (எ - று.) | | | (பாடம்) 1. புலமையங். 2. களிப்பவாய. 3. பாடுவ, பாடுவு. | | |
|
|