பக்கம் : 821 | | சார்த்தூலகன் அரிகேதனனை எதிர்தல் | 1313. | கள்ளாற்1 களி யிலனாலிகல் களமண்டிய செருவின் உள்ளாற்களி யுற்றானிவ னுயிருண்கென வுருவி நள்ளாதவர் தலைவவ்விய நகைவாளது வீசித் தள்ளாதவ னெதிரேமிகு சார்த்தூலக னேற்றான். | (இ - ள்.) கள்ளாற் களியிலனால் - கள்ளுண்டானைப்போல இவன் பேசினும் கள்ளுண்டு வெறிகொண்டானலன் இவ்வரிகேதனன், இகல் களம் மண்டிய செருவின் உள்ளால் இவன் களியுற்றான் - போர் ஆற்றும் களத்தின்கண்ணே உண்டாகிய போர்த்தொழிலாலே இவன் மறவெறி கொள்ளாநின்றான், இவன் உயிர் உண்கு - இவனுடைய உயிரை யானே குடிப்பேன், என உருவி - என்று தன் வாளை உறை கழித்து, நள்ளாதவர் தலைவவ்விய நகை வாள் அது வீசி - பல பகைவர்களின் தலைகளை வெட்டிப் புகழ்கொண்டு திகழா நின்ற அவ்வாட்படையைச் சுழற்றிக்கொண்டு, தள்ளாதவன் எதிரே - பகைவரை எதிர்த்தலை ஒழியாத அவ்விஞ்சையனுக்கு எதிரே, மிகு சார்த்தூலகன் ஏற்றான் - ஆற்றல் மிக்க சார்த்தூலகன் என்பான் சென்று போர் ஏற்றான், (எ - று.) அவ்வாறு இகழ்ந்து பேசிவந்த அரிகேதனனுக்கு முன்னர், சார்த்தூலகன் என்னும் வீரன் வாளை உறைகழித்து வீசியவனாய்ச் சென்று அவனை எதிர்ந்தான் என்க. | ( 183 ) | அரிகேதனன் ஆற்றும் மாயப்போர். | 1314. | வரையாலென முகிலாலென விருளாலென மறியும் திரையார்கட லளவேசெல விரியுந்நனி சிறுகும் நிரையாமுகின் முடிதேய்தர நிமிருந்நில மிதனுட் புரையாரிட 2மறையும்மிது பொருகின்றதொர் பொலிவே. விள்ளாதவர் சிலர் பின்செல விரல்வீளைகள் விளியா. | (இ - ள்.) வரையால் என - மலைபோன்றும், முகிலால் என - மேகம் போன்றும,் இருளால் என - இருள்போன்றும், மறியும் திரையார் கடல் அளவே செலவிரியும் - மடங்கும் அலைககளையுடைய கடலின் அளவிற்றாகப் பேருருக்கொண்டு பரவுவான், நனிசிறுகும் - ஒருகால் அணுவினும் நுண்ணியனாய்ச் சிற்றுருக்கொண்டு சுருங்குவான், நிரையாம் முகில் முடிதோய்தர நிமிரும் - நிரல்பட்ட மேகங்கள் தன் முடியிலே தோயும்படி வளர்வான், நிலம் இதனுள் - இப்பூமியின்கண்ணே உள்ள, புரையார் இடம் மறையும் - ஒரு சிறிய வளையிடத்தேயும் மறைந்து விடுவான், இது பொருகின்றதோர் பொலிவு - இஃது அவ்வரிகேதனன் போரிடுகின்றதோர் அழகாம், (எ - று.) | |
| (பாடம்) 1 களி யிலனா வதும். 2 மறியும் மிது. | | |
|
|