பக்கம் : 822
 

     ஆல்கள் : அசைகள். அரிகேதனன் வருகின்றதோர் பொலிவு அஃது, இஃது அவன்
பொருகின்றதோர் பொலிவு என்க.
மலைபோன்றும், முகில்போன்றும், இருள்போன்றும், கடல்போன்றும், விரிவான்; அணுவினும்
சிற்றுருக்கொண்டு ஒருகாற் சுருங்குவான்; முகிலை முட்டும்படி பேருருக் கொள்வான்; சிறிய
அளையினுட் சென்று மறைவான்; இவ்வாறு அவன் போர் செய்தான் என்க.
 

( 184 )

 

1315. மாலைத்தலை வளர்மாமதி நிகரும்வளை யெயிறுஞ்
சோலைத்தலை மலைபோல்வன தோளும்மிவை யுடையான்
காலைத்தலை யிளஞாயிறு புரைவான்மிசை 1கதுவாச்
சூலத்தலை நுதியாலவ 2னாகந்துளை யிட்டான்.
 
     (இ - ள்.) மாலைத்தலை வளர்மாமதி நிகரும் - மாலைக் காலத்தே தோன்றி வளரும்
இயல்புடைய இளம்பிறையை ஒத்த, வளையெயிறும் - வளைந்த கோரப்பற்களும்,
சோலைத்தலை மலைபோல்வன தோளும் - பொழில்களைத் தம்மிடத்தேயுடைய
மலைகளைப் போன்ற தோள்களும், இவையுடையான் - ஆகிய இவையிற்றை உடைய
அரிகேதனன், காலைத்தலை இளஞாயிறு புரைவான் மிசை - காலைப்பொழுதிலே
தோன்றும் இளைதாகிய ஞாயிற்று மண்டிலத்தை ஒத்த சார்த்தூலகன் மேலே, கதுவா -
படுமாறு, சூலத்தலை நுதியால் - சூலப்படையின் தலையாகிய நுனியாலே, அவன் ஆகம் -
அச்சார்த்தூலகன் மார்பிடத்தே, துளையிட்டான் - துளைத்தனன், (எ - று.)
எயிறும் தோளும் உடையனாகிய அரிகேதனன், இளஞாயிறு புரைவான்மிசை கதுவா
சூலத்தலை நுதியால் ஆகந் துளையிட்டான் எனக் கூட்டுக.

( 185 )

அரிகேதனனைச் சார்த்தூலகன் மாய்த்தல்

1316. இடுவானையவ் விடுசூலமொ டுடலும்மிரு துணியாப்
படவீசின னயில்வாளது படலும்பல மாயன்
1அடைவாய்மையி 2னுருவம்முத லதுவேதன தாகத்
தடமால்வரை யெனவீழ்தலு முடைவார்தம ரானார்.
 
 

     (பாடம்) 1 யெறியாச். 2 னாகத்திடை.. 1அடவாமையி. 2 னுகுவாமுத.