பக்கம் : 826
 

 

  நிலையிடத் துளரோ நிகரெனக் கென்பாய்
     1நின்றனை நிகருனக் காகித்
தொலைவிடத் தல்லாற் சொல்லிவை நுங்கட்
     கொழியுமோ தூமகே தனனே.
 
     (இ - ள்.) மலையெடுத்திடுவாய் - நீ மலைகளையும் தூக்குவாய் அது மாத்திரமோ
செய்வாய்?, மாநிலம் பிளப்பாய் - பெரிய பூமியையும் பிளந்தே விடுவாய், மறிகடல் அற
இறைத்திடுவாய் - அலைமடங்கு கடல்களையும் நீர்அற இறைத்தொழிப்பாய், உலகம்
பதலையா - பூமியைப் பானையாய்க்கொண்டு, உலைமடுத்து - உலையேற்றி, ஊழித்தீ
மடுத்து - ஊழித்தீயையும் கொளுவி, உயிர்கள் அட்டு உண்பாய் - உயிர்கள் முழுதையும்
ஒரு சேரச் சமைத்துத் தின்னவும் தின்பாய், எனக்கு நிகர் நிலையிடத்து உளரோ என்பாய்
- இப்போர்க்களத்தே எனக்குச் சமமாகும் வீரரும் உளரோ என்று வியப்பாய், நின்றனை -
இவற்றில் ஒன்றேனும் செய்யாது நிற்கவும் நிற்பாய், தூமகேதனனே - புகைக்கொடிப்
புல்லியோய்!, நிகர் உனக்கு ஆகி - உனக்கு நேர் பொருவார் உளராகி,
தொலைவிடத்தல்லால் - நீ அவர்க்கு ஆற்றாது புறங்கொடுத்து ஓடுமிடத்தே ஒழிவதல்லால்,
சொல்லிவை நுங்கட்கு ஒழியுமோ - உன்னைப் போன்றவர்கட்கு இவ் வீண்சொற்கள்
ஒழிவனவல்லவே, (எ - று.)

     சுவலனரதன் தூமகேதனன் கூறிய மொழிகளையே அநுவதித்து அவனை அசதியாடி
நகுகின்றான் என்க. இவ்வாறு நும் போல்வார் வீரம் பேசுவது ஒருசிறந்த வீரனை
எதிர்த்துப் போராடுகின்ற வரையிற்றான் என்று இகழ்கின்றான். சிறந்த வீரர் இவ்வாறு
வாயாற் கூறார் என்பது கருத்து.
 

( 190 )

தூமகேதனன் சுவலனரதனை இகழ்தல்

1321. என்றலு மதுகேட் டெரியுடைத் தேரோ
     னென்பவ னாமிவ னென்றே
நன்றுநன் றென்று நக்கன னக்கே
     நாணிலர் நம்மலை வாழ்வார்
இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா
     யென்றன னினையன மொழியாக்
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன்
     கொண்டனன் றண்டுகை வலித்தே.
 
     (இ - ள்.) என்றலும் - என்று சுவலனரதன் கூறலும், அது கேட்டு - அவ்வாசகத்தைத்
தூமகேதனன் கேட்டு, இவன் - இவ்வீரன் எரியுடைத்
 

     (பாடம்) 1 நின்றனன்.