தேரோன் என்பவனாம் என்றே - சுவலனரதன் என்பான் என்று அறிந்து கொண்டவனாய், நன்று நன்று என்று நக்கனன் - நன்று நன்று என்று கூறி இகழ்ந்து சிரித்து, நம்மலை வாழ்வார் நாணிலர் - மலையிடத்தே வாழும் விஞ்சையர் பெரிதும் நாணமற்றவராய் விட்டனர், இன்று எனக்கு எதிராய் நீ கொலோ பொருவாய் - இற்றைப் போரில் நீதானோ என்னை எதிர்த்துப் போர் செய்ய வந்தாய், என்றனன் - என்று இகழ்ந்தவனாய், இனையன மொழியா - இன்னோரன்ன மொழிகளைப் பலபடப் பேசி, குன்றினும் பெரியான் - மலையைவிடப் பெரிய உருவம் உடையவனும், கூற்றினும் வெய்யோன் - மறலியினும் மிக்க கொடுமையுடையோனும் ஆகிய தூமகேதனன், தண்டு கைவலித்துக் கொண்டனன் - ஒரு தடியைத் தன் கையால் இறுகப் பிடித்துப் போரை மேற்கொண்டான், (எ - று.) சுவலனரதனும், மலையில் வாழும் விஞ்சையன், ஆதலால், விஞ்சையன் ஒருவன் மனிதர் பொருட்டு மற்றொரு விஞ்சையனோடு பொருதல் நாணுடைத் தென்பான் - நம்மலைவாழ்வார் எனச் சுவலனரதனையும் உளப்படுத்தி உரைத்தான். நாணமும் மறமுமற்ற விஞ்சையனாகிய உன்னையோ யான் பொருது கொல்ல நேர்ந்தது என்பான், நீகொலோ பொருவாய் என்றான் என்க. |
(இ - ள்.) இன்று எனக்கு எதிராய் நீ கொலோ பொருவாய் என்று - இற்றைப்போரில் எனக்கு நேர்நின்று போர் செய்ய நீதானோ கிடைத்தனை என்று, இகழ்ந்து உரைத்தனை - இளிவரவுறப் பேசினாய், ஏடா - அடே தூமகேதனா, நின்று - அஞ்சாதே நின்று, எனக்கு எதிராம் நீர்மையர் - எனக்குப் பகையாய் எதிர்க்கும் மறத்தன்மையுடைய வீரர், நின்போல் - பேதையாகிய நின்னைப்போல, நிரம்ப வாய் திறந்து உரைப்பவரோ - மிகையாக வாயை அகலப் பிளந்துகொண்டு தற்புகழ் |