பக்கம் : 830 | | தூமகேதனன் மாய்தல் | 1325. | தட்டுப்போ ரதனுட் டமனியக் கடிப்புந் தாரினோ டாரமுஞ் சரியப் பட்டுப்போ யுருண்டா னவருளங் கொருத்தன் பருவரை கரியதொன் றனையான் துட்டப்போ ரியானைத் தூமகே தனனுந் தோற்குமோ வொருவனுக் கென்று மட்டுப்போ 1ரணிந்த மணிமுடி மன்னர் மயங்கினார் மானமு மிழந்தார். | (இ - ள்.) தட்டுப் போரதனுள் - தடியால் ஆற்றிய அப்போரின்கண், தமனியக் கடிப்பும் - பொன்னாலியன்ற செவியணியும், தாரினோடு ஆரமும் சரிய - மலர் மாலையோடே மணிவடங்களும் அற்றுவீழ, அவருள் அங்கு ஒருத்தன் - அவ்விருவருள் ஒரு மறவன், பருவரை கரியதொன்று அனையான் - கறுத்த பெரியதொரு மலையை ஒத்தவன், பட்டுப்போய் உருண்டான் - மாண்டு மண்மிசை உருள்வானாயினன், துட்டப்போர் யானைத் தூமகேதனனும் - கொடிய போரினை ஆற்றவல்ல யானையை உடைய தூமகேதனன் என்னும் சிறந்த மறவனும்; ஒருவனுக்குத் தோறகுமோ என்று - பகைவன் ஒருவனுக்குத் தோற்றுவிட்டானோ என்று வியந்து, மட்டுப்போது அணிந்த - தேன் நிறைந்த மலர்மாலையை அணிந்த, மணிமுடி மன்னர் - மணிகள் அழுத்திய முடியணிந்த அரசர்கள், மானமும் இழந்தார் - தம் பெருமையையும் இழந்து, மயங்கினார் - திகைத்தார்கள், (எ - று.) தட்டுப்போர் : விகாரம்; தண்டுப் போர் என்க. கடிப்பு - ஒருவகைக் காதணி. இதனைக் கடிசூத்திரம் என்ப. அவ்வாறு போர் செய்தவர்களுள் ஒருவனாகிய தூமகேதனன் சுவலனதரனாற் கொல்லப்பட்டான், சிறந்த மறவனாகிய தூமகேதனனும் தோற்று மாண்டானோ என வியந்து விச்சாதரர் மானமிழந்து மயங்கலாயினர்; என்க. | ( 195 ) | அழல்வேகன் போருக்கு வருதல் வேறு | 1326. | பொருதாங் கழிந்து புகைகேது வீழ வரிகேது முன்ன 2முடிய எரிதாங்கு வேலொ டினியீங்கு நின்று பெறுகின்ற தொன்னை 3யெழுகென் | | |
| (பாடம்) 1ரணிந்து. 2மடிய. 3யெழுக. | | |
|
|