பக்கம் : 832
 

     (இ - ள்.) கணிகொண்டு அலர்ந்த - காலங் கணித்தற்றொழிலை மேற்கொண்டு
மலராநின்ற, நறவேங்கையோடு - தேன் பொதுளிய வேங்கை மலரினோடே, கமழ்கின்ற
காந்தள் இதழால் - நறுமணங் கமழ்கின்ற காந்தட்பூவாலே, அணிகொண்டு அலர்ந்த
வனமாலை - புனைதற்றொழிற் சிறப்பையும் உடையதாய் மலர்ந்துள்ள அழகிய
மலர்மாலையை, சூடி - அணிந்து, அகில் ஆவி குஞ்சிகமழ - அகிலால் ஆய மணப்புகை
தன் தலை மயிரிடத்தே கமழாநிற்ப, மணிகுண்டலங்கள் - மணிகள் அழுத்திய குண்டல
அணிகள், இருபாலும் வந்து - இரண்டு பக்கங்களிலும் வந்து, வரை ஆகம் மீது திவள -
மலை போன்ற தன் தோள்களின் மிசையே புரளா நிற்ப, துணிகொண்டு இலங்கு -
துணிவை மேற்கொண்டு விளங்கும், சுடர்வேலினோடு - சுடருகின்ற வேற்படையோடே,
வருவான் - வாராநின்றான், இது என்கொல் துணிவு - இத்துணிவினது தன்மைதான்
எத்தன்மைத்தோ, (எ - று.)

     வேங்கை மலருங்காலம் தினை கொய்தற்குரிய காலம் என்று, காலத்தைக்
கணிப்பராகலின, வேங்கை கணித்தொழில் கொண்டலர்ந்த தென்றார்.

     சூடி, கமழ, திவள, வேலினோடு வருவான், இவன் துணிவுதான் எத்தகையதோ !
என்று, அழல்வேகன் வருகையைக் கண்டோர் வியந்தனர், என்க.
 

( 197 )

அழல்வேகனைத் தேவசேனன் எதிர்தல்

1328. அருமாலை வேல்வல் லழல்வேக னாகு
     மவனாயி லாக வமைக
எரிமாலை வேல்வ லிளையார்க ணிற்க
     விவனென்னொ டேற்க வெனவே
1பொருமாலை வாள்கை பொலிகேட கத்த
     னணிபோ திலங்கு முடியன்
செருமாலை மன்ன ரிறைதேவ சேன
     னெதிரே சிவந்து செலவே.
 
     (இ - ள்.) அருமாலை வேல்வல் அழல்வேகன் ஆகும் - பெறற்கரிய வெற்றி
மாலையையுடையவனும் வேற்படை கொண்டு போர் ஆற்றுதலிலே வல்லவனும் ஆகிய,
அழல் வேகன் என்னும் வீரன் போலும் ஈண்டு வருவோன், அவன் ஆயில் ஆக -
அவ்வழல்வேகனே ஆயின் நன்று ஆகுக, அமைக - எனக்கு எதிராக அவன் அமைக,
இவன் என்னோடு ஏற்க - இவ்வழல் வேகன் என்னோடு போர் ஆற்றக் கடவன், ஆதலின்
- எரிமாலை வேல்வல் இளையார்கள் நிற்க - சுடர் ஒழுங்குற்ற வேற்படை வல்லுநரான நம்
இளைஞராகிய வீரர்கள் ஈண்டே நிற்பாராக, எனவே -
 


     (பாடம்) 1 பொருமாலை வாள னணி கேடகத் தன் மணிபோதிலங்கு.