பக்கம் : 834 | | அச்செயல் எண்ண வடிவிற்றாதலின் குணன் என்றான். அழல்வேகன் மொழியிலிருந்து தேவசேனனுக்கு அவன் பழைய பகைவன் என்று தெரிகிறது. நீ என்னிடம் வந்து சிக்கிக் கொண்டாய், உன்னைக் கொன்று உன்குலத்தையும் வேரறுக்கப் போகிறேன் என்று தேவசேனனை அச்சுறுத்துகின்றான், என்க. | ( 199 ) | தேவசேனனின் மறுமொழி | 1330. | மலைமேலு நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க்கு வந்து படையாய் நிலமேலு நின்று பொருவான் புகுந்த நிலைகண்டு நின்று மிஙனே சலமே யுரைத்தி 1யிதுவோவு னாண்மை தழல்வேக வென்ன வெதிரே உலமேசு தோளி னொளிவேலி னோடு மொருவா னெதிர்ந்து பொருவான். | (இ - ள்.) மலைமேலும் நின்னை மதியாது வாழ்வன் - யான் வாழும் மலையிடத்தேயும் உன்னை ஒரு பொருளாக மதியாமலே தான் வாழாநின்றேன், மனிதர்க்கு வந்து படையாய் - மேலும் எம்முறவினராகிய மனிதர்க்குத் துணைப்படையாய் வந்து, நில மேலும் நின்று பொருவான் - இப்பூமியிடத்தேயும் உன்னை மதியாது எதிர்த்து நின்று போர் செய்யவும், புகுந்த நிலைகண்டு நின்றும் - ஆண்மையுடனே எதிர்வந்த என்னுடைய தன்மையைக் கண்கூடாகக் கண்டு வைத்தும், இஙனே - இவ்வாறு உரைத்தி - கூறாநின்றாய், சலமே - இது வஞ்சனையோ, இதுவோ உன் ஆண்மை - இவ்வாறு பொருளின்றிப் பேசுதல் மாத்திரையோ உனக்கு ஆண்மையாவது, தழல்வேக - அழல்வேகனே ! என்று பழித்து, உலம் ஏசுதோளின் - உலக்கல்லைப்பழித்த திரண்ட தோளின் மிசைச் சார்த்திய, ஒளிவேலினோடும் - சுடர் வேலோடும், ஒருவான் - அஞ்சி அகலாதவனாய், எதிரே எதிர்ந்து பொருவான் - அவன் எதிரே சென்று போர் ஆற்றத் தலைப்பட்டான், (எ-று.) மதியாது மலைமேல் வாழ்தலும் நிலமேல் எதிர்தலும் சலமன்றாகவும், சலம் என்றனை. நீ உண்மை அறியாத அறிவிலி என்றிகழ்ந்தபடி. இங்ஙனே, இடை குறைந்து இஙனே என நின்றது. | ( 200 ) |
| (பாடம்) 1 யிதுவோ நி னாண்மை. | | |
|
|